By.Rajah.மனதில் இருப்பதை இனியும் பொத்தி வைக்க தைரியமில்லாமல், ஏதேனும் ஒரு தீர்வு கிடைக்காதா என்கிற நம்பிக்கையில் இங்கே இறக்கி வைக்கிறேன். நான் 26 வயது நிரம்பிய ஆண்மகன். எம்.பி.ஏ. படித்துவிட்டு, ஒரு பெரிய நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறேன். எங்கள் குடும்பம், மிகவும் வசதியானது. வீட்டில் எனக்குத் திருமணத்துக்குப் பெண் பார்த்து விட்டார்கள்.
எனக்குத் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. காரணம், எனக்குப் பெண்கள் மீது உடல்ரீதியான ஈர்ப்போ, ஈடுபாடோ இல்லை. கடந்த 6 வருடங்களாக என்னுடைய ஆண் நண்பருடன் உடல்ரீதியான உறவில் இருக்கிறேன். அவரை விட்டுப் பிரிய எனக்கு மனமில்லை. அவரும் அப்படியே என்னுடனேயே இருப்பதற்காக, தன்னுடைய வாழ்க்கைத்துணை, மேல்படிப்பு, வேலை என எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு இருக்கிறார்.
என்னுடைய இந்த நிலை ஊரில் இருக்கும் என் பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ தெரியாது. தெரிவிக்கவும் விரும்பவில்லை. இப்போது, என் பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில், அவர்களின் மன திருப்திக்காக திருமணம் செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இதனால் எனக்கு சட்டப்படி ஏதாவது பிரச்னை வருமா என்னைப் போன்ற நிலையில் உள்ள ஆண்களுக்கு சட்டப் பாதுகாப்பு உண்டா இந்தியாவில் இத்தகைய உறவுகள் சட்டப்படி தவறில்லை என நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கி உள்ளதாக செய்தித்தாளில் படித்திருக்கிறேன். உண்மையா என் திருமணத்தால் யார் மனதும் புண்படாமல் இருக்க நல்ல தீர்வு சொல்லுங்கள். மேலும் என் நிலை சில நேரங்களில் எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது. செய்வதறியாது தவிக்கும் எனக்கு எதிர்காலம் என்னாகும்
- பெயர், ஊர் வெளியிட விரும்பாத இளைஞர்.
அன்புச் சகோதரருக்கு,
உங்கள் நிலை இருதலைக்கொள்ளி எறும்பு போல உள்ளதை அறிய முடிகிறது. நம் நாட்டில் இ.பி.கோ 377 பிரிவின் படி இயற்கைக்கு மாறான குற்றங்களில் ‘ஓரினச் சேர்க்கை’யும் ஒன்றாகக் கருதப் பட்டது. கடந்த 2009ம் ஆண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் ஒரு வழக்கின் தீர்ப்பில் ‘தனிப்பட்ட முறையில் யாருக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது (நிணீஹ் ஸிமீறீணீtவீஷீஸீsலீவீஜீ) குற்றமாகாது’ என தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் சென்று இப்போது நிலுவையில் உள்ளது. உங்கள் விஷயத்தில் உங்களால் ஒரு பெண்ணுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது எனத் தெரிந்தே பெற்றோரின் விருப்பத்துக்காக திருமணம் செய்து கொள்வது வரவேற்கத்தக்க செயலாக இருக்காது.
அப்படி ஒரு திருமண பந்தத்தில் நுழையும் நிலையில் சட்டப்படி உங்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தப் பெண்ணுக்கு உரிமை உண்டு. அதனால் நீங்கள் உங்கள் நிலை அறிந்து, திருமண பந்தத்தில் நுழையாமல், உங்கள் பெற்றோரிடம் உண்மையைச் சொல்லி, உங்களுக்கு மன நிறைவைத் தரும் வாழ்வை வாழ்வதே நல்லது.
மேலும் ஓரினச்சேர்க்கை இன்றும் நம் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடிய முறை அல்ல. சில மேலை நாடுகளில் அத்தகைய திருமணங்கள் அங்கீகரிக்கப்படலாம். உண்மைதான். ஆனாலும், நம் சமுதாயத்தில் அதை ஏற்றுக்கொள்ள இன்னும் பல காலம் ஆகும். எனவே தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்து, உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலையும் சரியாக்க, உடனே ஒரு மன நல ஆலோசகரைப் பாருங்கள்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக