செவ்வாய், 27 நவம்பர், 2012

ஷாமின் 6 படத்தின் இசை 5ம் திகதி வெளியீடு

நடிகர் ஷாம் நடிக்கும் ‘6’ என்ற படத்தின் இசை வெளியீட்டை டிசம்பர் 5ம் திகதி நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்தில் ஷாமுக்கு ஜோடியாக பூனம் கவுர் நடிக்கிறார். இப்படத்தை V.Z.துரை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
6 படத்திற்காக ஷாம் உடற்பயிற்சிகள் செய்து தனது தோற்றத்தை யாரும் அடையாளம் கண்டு கொள்ளமுடியாதபடி மாற்றினார்.
படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் பயணப்படுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், இசை வெளியீட்டை வரும் டிசம்பர் 5ம் திகதி நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
அதன்படி சென்னை சத்யம் திரையரங்கத்தில் இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெறவிருக்கிறது.
இவ்விழாவில் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவிருக்கின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக