திங்கள், 19 நவம்பர், 2012

நெருக்கமான ராணா- நயன்தாரா: எரிச்சலில் பிரபுதேவா


கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் என்ற படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ராணா- நயன்தாரா ஜோடி மும்பைக்கு வரவிருக்கிறார்களாம்.
ராணா, நயன்தாரா சேர்ந்து நடித்துள்ள தெலுங்கு படம் கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்.
நயன்தாரா படுகவர்ச்சியாக நடித்துள்ள இந்த படத்தை விளம்பரப்படுத்த நாயகி, நாயகன் இருவரும் இணைந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்கிறார்களாம்.
மேலும் இப்படத்தை இந்தியில் டப் செது வெளியிடும் திட்டமும் உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ராணாவும், நயனும் நல்ல நண்பர்களாகி விட்டனராம். ஆனால் அவர்கள் டேட் செய்வதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் அவர்கள் மும்பை வரும்போது அங்கிருந்து கிளம்பி வேறு எங்காவது செல்லத் திட்டமிட்டுள்ளாராம் பிரபுதேவா.
நயன்தாராவைப் பிரிந்த பிறகு பிரபுதேவா மும்பையில் தங்கி இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நேரத்தில் முன்னாள் காதலியை சந்திப்பது நன்றாக இருக்காது என்று நினைக்கிறாராம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக