செவ்வாய், 20 நவம்பர், 2012

துப்பாக்கி படத்துக்கு யு சர்ட்ஃபிகேட் : 1000 தியேட்டர்களில் பிரம்மாண்ட ரிலீஸ்

இளையதளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக இணைந்திருக்கும் ‘துப்பாக்கி’ படத்துக்கு ‘யு’ சென்சார் சர்டிஃபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கும் ‘துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக, காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷன் என பாப்புலர் டீம் இந்தப் படத்தில் களம் இறங்கியிருக்கிறது.
ஒரு ராணுவ வீரனை பற்றி சொல்லும் படமாக தயாராகியுள்ள இந்தப்படத்தில் எல்லையில் இருந்து ஊருக்கு திரும்பும் ராணுவ வீரன், உள்ளூர் தீவிரவாதத்தை அழிக்க போராடுவதே கதையாம். மேலும் இந்தப்படத்தில் மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களை மையப்படுத்தியும் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக மும்பையிம் சுமார் 50 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
வருகிற 9-ஆம் தேதி தீபாவளி ரிலீஸாக இருக்கும் இந்தப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் போர்டு மெம்பர்கள் படத்துக்கு ‘யு’ சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்தப்படத்தை உலகம் முழுவதும் உள்ள சுமார் 1000 தியேட்டர்களில் மிகப்பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக