துப்பாக்கி படம் ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையைக் கிளப்புவது நம்ம எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே துப்பாக்கி பட விமர்சனம்கொடுத்திருந்தோம். இப்போ அதில் கோட்டைவிடப்பட்ட லாஜிக்குகளைப் பார்ப்போம்.
- விஜய் வீட்டிலிருந்து தப்பிக்கும் தீவிரவாதியைப்பற்றி தன் 12 நண்பர்களுடன் விவரிக்கும் விஜய் தமிழில் விவரிக்கிறார். வட இந்தியர் மற்றும் சிங்குகளுக்கெல்லாம் எப்படித் தமிழ் தெரியும்? (வேறு இடங்களில் ஆங்கிலம்/ஹிந்தி கொடுத்துததுபோலவே இங்கும் கொடுத்திருக்கலாம்
- படத்தின் முக்கிய இடமான விஜயும் அவரது 12நண்பர்களும் தீவிரவாதிகளைக் கொல்ல பிரிவது அப்பட்டமான லாஜிக் மீறல். விஜயின் கூற்றுப்படி ஒருவன் இன்னொருவனை சந்திப்பான் அப்போது 12 பேர் 6,6பேராக பிரிந்து இருவரையும் பின்தொடர வேண்டும். (1:12)பிறகு(1:6) (1:6) பின்(1:3) (1:3) (1:3)(1:3) இதற்குமேல் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் எப்படி தொடர முடியும்? அப்படித் தொடரும்போது ஒருவர் ஒரு தீவிரவாதியையும், மற்ற இரண்டுபேர் இன்னொரு தீவிரவாதியையும் தொடர்கிறார்கள். 2பேர் தொடரும் தீவிரவாதி யாரையும் சந்திக்காமல் ஒருவர் மட்டுமே தொடரும் அந்த ஒரு தீவிரவாதி இன்னொரு தீவிரவாதியைச் சந்தித்தால் பின் தொடர ஆளில்லையே?மொத்தம் 4குரூப்பில் எப்படியும் இது மாறிப்போய்விடுமே? (நமக்கு கடைசியாக 1:1 வர வேண்டும். 8 இடத்தில் பாம் வைப்பதாகக் கொண்டிருந்தால் மட்டுமே இது சரியாக வரும்)
- சின்னச்சின்ன லாஜிக்குகளை எல்லாம் விட்டுவிடலாம்.பெண்பார்க்கும்போது ஆச்சாரமான உடையணிந்து வருவதாகக் காட்டப்படும் காஜல் முதுகு முழுவதும் தெரிவதுபோல் உடையணிந்திருப்பது, 12 தீவிரவாதிகளைச் சுடும்போது எல்லோருடைய துப்பாக்கியிலும் சைலன்சர் போடாதது. (பொதுமக்கள் மத்தியில் வீண் குழப்பங்கள், பதற்றம் தவிர்க்கப்படுமே?)கிளைமாக்ஸில் விஜய் தன கடைசி ஆசையாய் “அடிவாங்கியே சாகணும்” என்பதற்தெல்லாம் தீவிரவாதிகள் ஒத்துக்கொள்வது என்ன லாஜிக்கோ?
டிஸ்கி: இந்த ஒரு பாட்டுக்காகவே எல்லாவற்றையும் மறந்துவிடலாம். “அண்டார்டிகா” பாடலில் வரிகள், நடனம், இசை, ஒளிப்பதிவு, நகைச்சுவை,எக்ஸ்ப்ரசன், படமாக்கிய விதம் என எல்லாமே 100%.நிஷாஆஆவுக்காகவே 100 முறைக்குமேல் இந்தப் பாட்டை பார்த்துட்டேன் J
“பாக்ஸர் நிஷான்னு சாஸ்திரி நகர்ல கேட்டுப்பாரு!”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக