டைரக்டர் பாலா இயக்கியுள்ள பரதேசி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் வேதிகா.
அவரைப்பொறுத்தவரை இது கிடைப்பதற்கரிய வாய்ப்பு என்பதால் காடு, மலை, வெயில் என்று பாராமல் மாதக்கணக்கில் பாலாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக்கொடுத்திருக்கிறார். கூடவே இந்த படத்தில் வேதிகாவின் இயல்பான நடிப்புக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதனால் பரதேசி தனக்கு நல்லதொரு அங்கீகாரத்தை தரும் என்று மனசு நிறைய நம்பிக்கையுடன் இருக்கிறார் வேதிகா. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதையடுத்து நடந்த மிரஸ்மீட்டில், அழகான நடிகையான வேதிகாவை, இப்படி அசிங்கமான நடிகையாக்கி விட்டீர்களே? என்று கேள்விகள் எழுந்தபோது,கதாபாத்திரத்திற்கு மேட்சாக வேண்டும் என்பதற்காக அவரது உடம்பு முழுக்க கருப்பு வண்ணம் பூசி படமாக்கியிருக்கிறேன். மற்றபடி வேதிகா ஒன்றும் பெரிய அழகி இல்லை. சுமாரான பொண்ணுதான் என்று பதில் சொன்னார் பாலா. ஆனால் அவரது எந்த யதார்த்தமான பதிலைக்கேட்டு அதுவரையில் தவுசண் வாட்ஸ் பல்பமாக பிரகாசித்த வேதிகாவின் முகம் திடீரென்று சுருங்கிப்போனது. தனியாக விட்டால் குலுங்கி குலுங்கி அழுதுவிடும் கண்டிசனில் மேடையில் அமர்ந்திருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக