விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ‘தல’ என தலைப்பு வைக்க முயற்சி நடக்கிறது. அஜீத்தை ரசிகர்கள் 'தல' என பட்ட பெயரிட்டு அழைக்கின்றனர். படங்களிலும் அவரை 'தல' என்று சக நடிகர்கள் சொல்வதுபோல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
மும்பையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்துக்கு பல மாதங்களாக தலைப்பு வைக்காமல் உள்ளது. நிறைய தலைப்பு தேர்வு செய்து இறுதியில் பொருத்தமாக இல்லை என்று ஒதுக்கி விட்டனர்.
இந்த நிலையில் ‘தல’ என்ற தலைப்பை படத்துக்கு வைக்கலாம் என எழுத்தாளர் சுபா யோசனை சொன்னார். இயக்குனருக்கும் அது பிடித்தது. ஆனால் அஜீத் அதை ஏற்கவில்லை. கதைக்கு தேவையான தலைப்பை தேர்வு செய்து வையுங்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் எதுவும் செய்யாதீர்கள்.
‘தல’ பெயர் வைக்க வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டார். அப்போது அவர்கள் மனதில் அஜீத் ரொம்ப உயர்வாக தெரிந்தாராம். ஏற்கனவே தனது பெயரில் ரசிகர் மன்றம் வேண்டாம் என்று அஜீத் கலைத்து விட்டார். சம்பாதித்து பெற்றோருக்கு உதவுங்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக