சிலம்பாட்டம் சனாகான் ஒரே மொழியை மட்டுமே நம்பி இருக்காமல் பல மொழிகளிலும் பரவலாக
நடித்து வருகிறார். தமிழைப்பொறுத்தவரை பயணம் படத்துக்குப்பிறகு சரியான படங்கள் அமையாததால் மலையாளத்தில் பிசியாகி விட்டார். அதில் கிளைமாக்ஸ் என்ற படம் முக்கியத்துவம் வாய்ந்தது. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் வித்யாபாலன் நடித்த த டர்ட்டி பிக்சர்ஸ் படம்தான் மலையாளததில் க்ளைமாக்ஸ் ஆகியிருக்கிறது. இந்த படத்தில் வித்யாபாலனை மிஞ்சும் அதிரடி நடிகையாக உருவெடுத்திருக்கிறார் சனாகான். அதனால் அவர் கேட்ட சம்பளத்தை வாரி வழங்கியுள்ளனர். ஆனால் இதுவரை முழு வீச்சில் அப்படத்தில் நடித்து வந்த சனாகான், கடைசி க்ளைமாக்ஸ் காட்சியை படமாகும் நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொள்ள வேண்டியிருப்பதாக சொல்லி, படக்குழுவை டீலில் விட்டுள்ளாராம. அதனால் அடுத்த மாதத்தில் படத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டிருந்தவர்கள், இப்போது சனாகாவின் திடீர் மாற்றம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியையும் பிப்ரவரிக்கு மாற்றி வைத்துள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக