By.Rajah.புன்னகை அரசி சினேகாவுக்கும், 5 ஸ்டார் நாயகன் பிரசன்னாவுக்கும் இது தலை தீபாவளி. |
தங்களது தலைதீபாவளியை மிகவும் மகிழ்ச்சியோடு கொண்டாட திட்டமிட்டுள்ளனர் இந்த
புதுமண தம்பதியினர். பிறந்த நாள் என்றாளே ஏதாவது அநாதை ஆசிரமங்களுக்கு சென்று கொண்டாடும் சினேகா, தலை தீபாவளியையும் அப்படியே கொண்டாட ஏற்பாடு செய்துள்ளாராம். புகுந்த வீட்டில் அளவற்ற மகிழ்ச்சியோடு இருப்பதாக தெரிவித்துள்ள புன்னகை அரசி, தன் கணவர் பிரசன்னாவை அருகில் வைத்துக் கொண்டு வெடி வெடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார். சினேகாவுக்கு பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் தீபாவளி பரிசாக பட்டுப்புடவை வந்திருக்கிறதாம். மேலும் தன் ரசிகர்களுக்கு, மிக பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். கவனமாக பட்டாசுகளை வெடியுங்கள், குழந்தைகளிடம் பட்டாசுகளைக் கொடுத்து விட்டு, நீங்கள் கவனமின்றி இருந்து விடாதீர்கள். குழந்தைகளுக்கோ, பெரியவர்களுக்கோ ஒரு சிறிய தீக்காயம் கூட ஏற்படாமல் இருக்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். பட்டாசு வெடிக்கும் போது செருப்பு போட்டுக் கொள்ளுங்கள் மத்தாப்பூ கொழுத்திவிட்டு அதன் கம்பியை தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் போடுங்கள். கம்பியை யாராவது மிதித்து விட்டால் அன்றைய நாளின் மகிழ்ச்சியே தொலைந்து விடும். எனவே சின்ன விடயமாக இருந்தாலும் தீபாவளி அன்று பெரிதாக கவனம் செலுத்தி அனைவரும் தீபாவளியை பாதுகாப்பாகக் கொண்டாடுங்கள். பின்னர் பிரசன்னா, "அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!" தெரிவித்தார் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக