திங்கள், 12 நவம்பர், 2012

ஆரோகணம். திரை விமர்சனம்

 

By.Rajah..{காணொளி}வண்டியில் காய்கறி விற்று பிழைப்பவர் விஜி. பைபோலார் டிஸ்ஆர்டர் என்ற மனச்சுமை நோயினால் பாதிக்கப்படுகிறார். இதனால் கணவன் ஒதுக்கி வைத்து இன்னொரு திருமணம் செய்து கொள்கிறான்.

பள்ளிக்கு செல்லும் மகன் மற்றும் மகளை கஷ்டப்பட்டு வளர்க்கிறார். மகளுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. அப்போது விஜி மாயமாகிறார். பிள்ளைகள் தேடி அலைகின்றனர். போலீசாரும் தேடுகிறார்கள். விஜி கார் விபத்தில் சிக்கியது தெரிய வருகிறது. குடும்பத்தினருடன் மீண்டும் சேர்ந்தாரா என்பது மீதி கதை...

தாய், பிள்ளைகள் பாச சென்டிமென்டுடன் வந்துள்ள உயிரோட்டமான கதை... பைபோலார் டிஸ்ஆர்டர் நோய் பாதித்த தாய் கேரக்டரில் விஜி வெளுக்கிறார். உருண்ட விழிகளுடன் வெறித்த பார்வை... அரிவாளை தூக்கி வெட்டப்போகும் ஆவேசம்.. நட்சத்திர ஓட்டலில் புகுந்து பணக்கார கூட்டத்தினருடன் ஆடும் குத்தாட்டம்... என ஒவ்வொரு பிரேமிலும் உணர்வுகளை கொட்டுகிறார்.

கணவன் சித்ரவதையில் தவித்தும், அவன் கைவிட்டதும் குழந்தைகளை காப்பாற்ற வண்டியில் காய்கறி விற்றும், படும் அவஸ்தைகளில் நெஞ்சை கனக்க செய்கிறார். விஜிக்கு விருது கிடைக்கலாம்.

கணவனாக வரும் மாரிமுத்து கேரக்டரில் அழுத்தம் பதிக்கிறார். மகனாக வரும் வீரேஷ் காணாமல் போன தாயை வீதி வீதியாய் தேடி அலைந்து மனதில் நிறைகிறார். மகள் கேரக்டரில் வரும் ஜெய் ஹூகினி நடுத்தர குடும்பத்தின் அழகான வார்ப்பு...

திருமண செலவுக்கு பயந்து ஓடிவிட்டாள் என்று தாயை இழிவுபடுத்தி பேசும் தந்தையிடம் தனக்காக அவள் சேர்த்து வைத்து போன நகை, பணத்தை அள்ளி கொண்டு வந்து வீசி ஆவேசப்படுவது முத்திரை...

நோய் தாக்கிய தாய்... அவள் குடும்ப பின்னணி... அதோடு இணைந்த பாச போராட்டம் என ஜீவனுள்ள கதையை காட்சி படுத்திய இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கை குலுக்கலாம்.

அழகான பெண்களிடம் வழியும் எம்.எல்.ஏ. வாக வரும் ஜெயப்பிர காஷ், மனநல மருத்துவராக வரும் சம்பத் கேரக்டர்களும் நேர்த்தி. சில சீன்களில் நாடகத்தனம் எட்டிபார்க்கிறது. கார் பலமாக மோதி தூக்கி வீசப்பட்ட விஜி காயம் இன்றி சாதாரணமாக எழுந்து வருவது யதார்த்தம் இல்லாதது.
கே இசையில் தப்பாட்டம், பாடல் தாளம் போட வைக்கிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக