வெள்ளி, 30 நவம்பர், 2012

திரைப்படமாகும் வைரமுத்துவின் தண்ணீர் தேசம் நாவல்

தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்வரிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வருகிறது.
முதன்முறையாக வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நாவலான தண்ணீர் தேசம் விரைவில் திரைப்படமாக உள்ளது.
பிரபல வாரபத்திரிக்கையில் தொடராக வெளிவந்து பல லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது இந்த நாவல்.
1996 இல் புத்தகமாக வெளியிடப்பட்டு இன்று வரை 18 பதிப்புகள் கண்டு விற்பனையிலும் சாதனை படைத்திருக்கிறது.
கடற்பரப்பில் பல சாகசங்களுக்கிடையே நடக்கும் காதல் கதையினைச் சொல்லும் தண்ணீர் தேசம் அந்தத் தலைப்பிலேயே திரைப்படமாக்கப்படுகிறது.
ரெட் எர்த் மூவிஸ் புரொடக்ஷன்ஸ் என்கிற மலேசிய நிறுவனத்தின் சார்பில் நிவாஸ் ராகவன் -யுவராஜ் செளமா ஆகியோர் தண்ணீர் தேசத்தைத் தயாரிக்கிறார்கள்.
நாவலை எழுதிய வைரமுத்துவே படத்திற்கு கதை- வசனம் மற்றும் பாடல்களையும் எழுதுகிறார்.
இப்படத்தை ஷிவன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே வேறு மொழிகளில் சில வெற்றிப் படங்களை இயக்கியவர். தமிழில் இது இவருக்கு முதலாவது படம்.
இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் இணை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.
எங்கேயும் எப்போதும் இசையமைப்பாளர் சத்யா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தூத்துக்குடி, அந்தமான் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஜனவரி 2013ல் முற்றிலும் புதுமுகங்களோடு தொடங்கவிருக்கும் தண்ணீர் தேசம் படத்திற்கு கதாநாயகன், கதாநாயகி தெரிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக