தமிழ்நாட்டில் அல்வாவுக்கு புகழ்பெற்ற திருநெல்வேலி தமிழ் பேச நடிகர் அஜித் பயிற்சி எடுத்து வருகிறார். |
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் அஜித் குமார், அடுத்து சிறுத்தை சிவா
இயக்கத்தில் நடிக்க உள்ளார். வரும் டிசம்பர் மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது. அப்போதே அஜித் இதில் கலந்து கொண்டு நடிக்கத் தொடங்கிவிடுவார். படத்தின் கதைக்களம் பெரும்பாலும் திருநெல்வேலியை பிரதானமாக கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. எனவே முக்கிய காட்சிகள் அங்குதான் படமாகிறது. அதோடு, படத்தின் வசனங்களையும் நெல்லை தமிழில் அட்சரசுத்தமாக எழுதியுள்ளனர். அதனால், அஜீத்தும் திருநெல்வேலி தமிழை உள்வாங்கி பேசி, நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக