வியாழன், 8 நவம்பர், 2012

'பட்டத்து யானை' பட கொமெடியன் வடிவேலு? சந்தானம்?

By.Rajah..கொலிவுட்டில் விஷால், ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா இணைந்து நடிக்கும் படம் 'பட்டத்து யானை'.
க்ளோபல் இன்போடேயின்மென்ட் சார்பில் இப்படத்தை இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்குகிறார்.
திமிரு படத்துக்கு பின்பு விஷால், வடிவேலு கூட்டணி 'பட்டத்து யானை'க்காக இணைகிறது.
இதில் வடிவேலுவுக்கு நாயகன் விஷாலுக்கு இணையான கதாபாத்திரம் என்றும் பட உலகில் தகவல் பரவியது.
அரசியல் பிரமுகரான மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்தில் வடிவேலு நடிப்பது சந்தேகமாக உள்ளது.
வடிவேலு நடிப்பதாக பேசப்படும் கதாபாத்திரத்தில் நட்சத்திர கொமெடியன் சந்தானம் நடிக்க வாய்ப்பிருப்பதாக பட வட்டாரம் கூறுகிறது.
விஷாலும், சந்தானமும் 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'தோரணை' படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக