By.Rajah.பாலாவின் பரதேசியில் அதர்வாவுடன் இணைந்து நடிக்கிறார் வேதிகா. |
இவர் பரதேசி அனுபவங்கள் குறித்து வருத்ததுடன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், இனியொரு முறை இதே போன்ற ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக ஒத்துக்கொள்ள மாட்டேன். பாலா நடிக்க அழைத்தபோதே பலரும் பயமுறுத்தத்தான் செய்தார்கள் என்றாலும், அவருடைய தீவிர ரசிகை நான். கொஞ்சம் பயந்தபடியேதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது எப்படி நடந்துகொள்வார் என்று யாராலும் யூகிக்கமுடியாது. சில நாட்களில் காலையிலிருந்து நள்ளிரவு வரை வறுத்தெடுத்துவிடுவார். சில நாட்களில் ஷாட்டுக்கே அழைக்காமல் முழு நாட்களும் சும்மாவே அமர்ந்திருக்க வேண்டி வரும். படத்தின் ஒரு சின்ன ஷெட்யூல் அடர்ந்த காட்டுப்பகுதி ஒன்றில் நடந்தது. அப்போது ஒரு நாள் பெரிய காட்டுப் பல்லி ஒன்று என் தோளில் விழுந்தபோது காடே அதிரும்படி அலறி இரண்டு நாள் காய்ச்சலில் விழுந்ததை மறக்க முடியாது என்கிறார் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக