By.Rsajah.முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கு பிரான்ஸ் நாட்டின் 2வது உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அவரது பிறந்தநாளில் இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. 1994ம் ஆண்டு நடந்த உலக அழகிபோட்டியில் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா ராய். பின்னர் மணிரத்னத்தின், இருவர் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ஜீன்ஸ் படத்தில் நடித்த ஐஸ்வர்யா, அப்படியே பாலிவுட்டிலும் கால்பதித்தார். தூம்-2, தேவதாஸ், குரு, ஜோதா அக்பர், உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களிலும் நடித்து முத்திரை பதித்தார். தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 35க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து அசத்தியுள்ளார்.
இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா, திருமணத்துக்கு பின்னரும் நடித்து வந்தார். ஹீரோயின் படத்தில் நடித்தபோது ஐஸ்வர்யா கர்ப்பமான விஷயம் தெரியவர அந்தபடத்தில் இருந்து விலகி சினிமாவுக்கு தற்காலிகமாக முழுக்கு போட்டார். கடந்தாண்டு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்துள்ளார். குழந்தை பிறப்புக்கு பின்னர் நடிக்காமல் இருந்து வரும் ஐஸ்வர்யா மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் சினிமா துறையில் ஐஸ்வர்யா ராயின் கலைச்சேவையை பாராட்டி பிரான்ஸ் நாட்டு அரசு அவருக்கு செவாலியே விருது வழங்கி கவுரவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டு சார்பில் வழங்கப்படும் உயரிய இரண்டாவது விருது இதுவாகும். ஐஸ்வர்யாவுக்கு நேற்று(01.11.12) 39வது பிறந்தநாள். மும்பையில் நடந்த அவரது பிறந்தநாளில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதனை இந்திய நாட்டுக்கான பிரான்ஸ் தூதர் பிரான்கோயிஸ் ரிச்சயர் வழங்கினார்.
இந்த விருது தமக்கு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இப்படியொரு உயரிய விருதை கொடுத்து கவுரவித்த பிரான்ஸ் அரசுக்கு தமது நன்றிகள் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார். மேலும் சினிமாவில் தான் இந்தளவுக்கு வளர்ச்சி அடைய உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள் என்று ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக