மாடலிங் துறையில் கலக்கி விட்டு, திரைக்கு வந்த யாமி கவுதம், முதலில் கன்னட படத்தில் தான் அறிமுகமானார். இதற்கு பின், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தார். இந்தியில், “விக்கி டோனர் என்ற ஒரே படத்தில் தான் நடித்தார். இதற்கு பின்,சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், தென் மாநில திரைப்பட தயாரிப்பாளர்கள், கால்ஷீட்டுக்காக, யாமி கவுதமின் வீட்டை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர். தமிழில், “கவுரவம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் யாமி, அடுத்ததாக, “தமிழ்ச் செல்வனும், தனியார் அஞ்சலும் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை, கவுதம் மேனன் தயாரிக்கிறார். தெலுங்கில்,”கொரியர் பாய் கல்யாண் என்ற படத்திலும், யாமி நடிக்கிறார். குடும்ப பாங்கான கேரக்டர்களுக்கும், மாடர்ன் கேரக்டர்களுக்கும் பொருந்தக் கூடிய முக லட்சணம், யாமியிடம் இருப்பதால் தான், அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக