வெள்ளி, 23 நவம்பர், 2012

அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்னிலையில் "கேட்ஸ் சூப்பர் சிங்கர் 2012"

 
அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் நவம்பர் 10ம் தேதிதீபாவளிபண்டிகை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக "கேட்ஸ் சூப்பர் சிங்கர் 2012" இறுதிப் போட்டி ஆயிரக்கணக்கானஅமெரிக்கவாழ் தமிழர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில்பிரபலத்திரைப்படப்பின்னணிப் பாடகர்களானமஹதி, ஹரீஷ் ராகவேந்திரா, விஜய் டிவி புகழ் சத்ய பிரகாஷ் மூவரும் நடுவர்களாகக்கலந்துகொண்டு, போட்டிகளில் சிறப்பாகப் பாடியவர்களைத் தேர்வு செய்து "கேட்ஸ் சூப்பர் சிங்கர் 2012" பட்டங்களை வழங்கி சிறப்பித்தனர்.
பின்னர், சஹானா ட்ரீம்ஸ் குழுவினருடன் இணைந்து மஹதி, ஹரீஷ் ராகவேந்திரா, சத்ய பிரகாஷ் தங்களின் இனிய குரலால் நள்ளிரவு வரை தொடர்ந்து வழங்கிய இசை மழையை மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக