By.Rajah.கொலிவுட்டில் ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாயா. |
இவர், சமீபத்தில் கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்திலிருந்தும் விலகினார். இந்நிலையில், ரிச்சாவை மயக்கம் என்ன படத்தில் நடித்த நடிகர் சுந்தர் ராம் திருமணம் செய்ய வற்புறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிச்சா சென்னை வரும் போதெல்லாம் விமான நிலையத்துக்கு சென்று காரில் அழைத்து வந்து நட்சத்திர ஒட்டல்களில் தங்க வைப்பதை சுந்தர் வழக்கமாக வைத்து இருந்தார். இருவரும் காதலிப்பதாக அப்போதே கிசுகிசுக்கள் கிளம்பின. சுந்தரும் ரிச்சாவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. காதல் பரிசாக சுந்தருக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் கேமரா ஒன்றை ரிச்சா வாங்கி கொடுத்தார். இந்நிலையில் ரிச்சாவின் மார்க்கெட் திடீரென உயர்ந்தது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் மூன்று படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். சம்பளமும் பல மடங்கு உயர்ந்தது. ஆனால் சுந்தருக்கு படங்கள் இல்லை. இதையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சுந்தரை சந்திப்பதை ரிச்சா தவிர்த்தார். இதனையடுத்து திருமணம் செய்ய சொல்லி மிரட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால் ரிச்சாவின் மானேஜர் கல்யாண் இதெல்லாம் வதந்திகள் என்றார். ரிச்சா பிசியாக நடிப்பதால் அடுத்த நான்கைந்து வருடங்களுக்கு திருமணம் பற்றி சிந்திக்க மாட்டார் என்றும் கூறினார். நடிகர் சுந்தரிடம் கேட்டபோது தன்னைப் பற்றி பரவியுள்ள செய்திகள் அனைத்தும் வதந்தி என்றார். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக