சிவா இயக்கத்தில் விஜயா Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகும் புதிய படத்திற்கு அஜீத்தின் ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளாராம். |
இப்படம் குறித்து இயக்குனர் சிவா கூறுகையில், நான் அஜீத்தின் தீவிர ரசிகன்.
இப்படத்தில் முதன் முறையாக அஜீத்தும், தமன்னாவும் இணைய உள்ளனர். தயாரிப்பாளர்கள் தங்கள் நிறுவனத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் படம் எடுக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் விதார்த், பாலா, முனீஷ், சோஹில் போன்ற இளம் நாயகர்களுடன் அஜீத்தும் இணைந்து நடிக்க உள்ளார். இப்படத்தில் வரும் ஜெயராம், சந்தானத்தின் நகைச்சுவை பெரிதளவில் பேசப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவாகும் பாடல்கள் அஜீத் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தளிக்கும். மறைந்த திரு நாகி ரெட்டி அவர்களின் நூற்றாண்டு வருடத்தில் இப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்றே கூறுவேன். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தான் என்றாலும், பாடல் பதிவு வருகிற டிசம்பர் மாதம் 2ஆம் திகதி திரு நாகி ரெட்டி அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக