திங்கள், 5 நவம்பர், 2012

துப்பாக்கி பிரச்சனையை புத்திசாலித்தனத்தால் தீர்த்த முருகதாஸ்.

By.Rajah.துப்பாக்கி என்ற தலைப்பில் விஜய்யை வைத்து ஒரு மெகா படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் கள்ளத்துப்பாக்கி என்றொரு படத்தை இயக்கியுள்ள பட நிறுவனம், துப்பாக்கி என்ற தலைப்பை விஜய் படத்துக்கு வழங்கக்கூடாது என்று நீதிமன்றத்தை நாடியது. இதனால் ஒரு கட்டத்தில் அந்த தலைப்பு பறிபோய் விடும் என்ற நிலையே ஏற்பட்டது.
அதனால் தடுமாறிப்போனவர் துப்பாக்கி படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்தான். ஏற்கனவே ஏழாம் அறிவு படம் தோல்வி அடைந்ததால், இந்த படத்தின் வெற்றிதான் அவரது மார்க்கெட்டை தீர்மானிக்க வேண்டும் என்பதால் இந்த டைட்டீல் பிரச்னையை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று தீவிரமாக யோசித்தார். கடைசி முயற்சியாக, சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று யோசித்து, கள்ளத்துப்பாக்கி படத்தின் இயக்குனர் லோகியாஸையே சந்தித்து பேசினார்.

இனிமேல் புதிதாக ஒரு டைட்டீல் வைத்து அதை ரீச் பண்ணுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதனால் இந்த டைட்டீலுக்கு பிரச்னை செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். ஒரு டெக்னீசியனின் பிரச்சினை இன்னொரு டெக்னீசியனுக்கு தெரியத்தானே செய்யும். ஒரு பெரிய இயக்குனரே இறங்கி வந்து கேட்கிறபோதும் பிடிவாதமாக இருப்பது முறையல்ல என்று நினைத்த லோகியாஸ், இனிமேல் எங்களால் துப்பாக்கி டைட்டீலுக்கு எந்த பிரச்சினையும் வராது என்று சொல்லியிருக்கிறார்.
ஆக, முருகதாஸின் புத்திசாலித்தனத்தினால் ஒரு சிக்கல் தீர்ந்து, துப்பாக்கி படம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி வாகை சூட தயாராகிக்கொண்டிருக்கிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக