சனி, 10 நவம்பர், 2012

நீர்ப்பறவை படத்திற்கு வரிவிலக்கு: நீதிமன்றம் உத்தரவு

By.Rajah.சீனுராமசாமி இயக்கத்தில் விஷ்ணு, சுனைனா ஜோடியாக நடித்த படம் ‘நீர்ப்பறவை’.
உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இப்படத்தை கேளிக்கை வரி விலக்கு குழுவுக்கு அனுப்பினர்.
படத்தை பார்த்த அந்த குழுவினர் வரிவிலக்குக்கு உகந்த படம் அல்ல என்று அறிவித்தனர். இதனால் அப்படத்துக்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை.
நீர்ப்பறவை படத்துக்கு வரிவிலக்கு அளிக்க கோரி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சீனுராமசாமி அறிவித்தார். ரெட்ஜெயின்ட் பட நிறுவனம் சார்பில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து நீர்ப்பறவை படத்துக்கு வரிவிலக்கு அளிக்க கூடாது என்ற முடிவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாக சீனுராமசாமி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நீர்ப்பறவை ஆபாசம் வன்முறை இல்லாத படம் என்று தணிக்கை குழு ‘யு’சான்றிதழ் அளித்துள்ளது.
இப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க கூடாது என்று சம்பந்தப்பட்ட குழுவினர் முடிவு எடுத்தது அதிர்ச்சி அளித்தது.
இந்த முடிவு என்னை பாதிக்கும். நான் அரசியல் சார்பு இல்லாதவன்.
எனவே தான் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தேன் என்றும் ஆனால் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும், சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக