திங்கள், 19 நவம்பர், 2012

இந்தியில் வெடிக்க தயாராகும் துப்பாக்கி

கொலிவுட்டில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடித்து வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் துப்பாக்கி.
தீபாவளியன்று வெளியிடப்பட்ட இப்படம் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
ஏற்கனவே துப்பாக்கி படத்தை இந்தியில் ரீமேக் செய்யபோகிறேன் என்று படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கூறியிருந்தார்.
தற்போது அதற்கான நேரம் வந்து விட்டது. அக்ஷய் குமார் தான் இந்தியில் நடிக்க போகிறார் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
தற்போது ரசிகர்களுக்கு சூடான செய்தி என்னவென்றால் அக்ஷய் குமார் ஏ.ஆர் முருகதாசிடம் உடனடியாக அப்படத்தை இயக்க கூறியுள்ளாராம்.
அக்ஷய் குமாருக்கு ஜோடியாக பரிணீத சோப்ரா அல்லது கத்ரினா கைப் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியில் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது. இப்படத்தை விப்புள் ஷா தயாரிக்க உள்ளார்.
மேலும், துப்பாக்கி தமிழ்நாட்டில் வெளியான மூன்றே நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக