செவ்வாய், 27 நவம்பர், 2012

மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் காஜல்

நாயகி காஜல் அகர்வாலுக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆதரவு குவிந்து கொண்டே வருகிறதாம்.
இவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி விட்டதால் உற்சாகத்தில் சிறகடித்து பறக்கிறார் காஜல்.
இதுவரை எந்தவொரு தென் இந்திய நடிகைக்கும் இந்த அளவுக்கு பேஸ்புக்கில் ஆதரவு குவிந்தது இல்லை என கூறும் அவர், ரசிகர்களையும், என்னையும் இணைக்கும் பாலமாக பேஸ்புக் திகழ்கிறது.
என்னுடைய படம், நடிப்பு, உடைகள், பலம், பலவீனம் ஆகியவற்றை பேஸ்புக் வாயிலாக ரசிகர்கள் உடனுக்குடன் தெரிவிக்கின்றனர்.
இதனால் அடுத்த படத்தில் நடிக்கும் போது முந்தைய படத்தில் இருந்த குறைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடிகிறது.
இது எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது என மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறாராம் காஜல்.
துப்பாக்கி படத்துக்கு கிடைத்த வெற்றி தான் இதற்கு காரணமாம். தமிழை தவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதால், உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறாராம் காஜல் அகர்வால்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக