தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளவர் லட்சுமி மஞ்சு. |
நடிகையாக இருந்த போதிலும் டாப்சீ மற்றும் ஆதி நடிக்க மறந்தேன் மன்னித்தேன் என்ற
படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து தயாரித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர மணிரத்னம் இயக்கும் கடல் படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ராதாவின் மகள் துளசி மற்றும் கார்த்திக்கின் மகன் கெளதம் நடிப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது கடல் படம். பெயருக்கு ஏற்ப கடலை நம்பி வாழ்க்கை நடத்துபவர்களின் கதையை தான் படமாக்கி இருக்கின்றனர். இப்படத்தில் லட்சுமி மஞ்சு, அரவிந்த் சாமி ஜோடியாக நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் குத்தாட்டமும் ஆடி இருக்கிறாராம். இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் நெஞ்சுக்குள்ளே என்ற பாடல் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக