By.Rajah..இந்தி பட ரீமேக்கில் ரஜினியை இயக்க முடிவு செய்துள்ளார் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா. |
இந்தியில் அக்ஷய்குமார், பரேஷ் ராவல் நடிப்பில் ஹிட்டான படம் ஓ மை காட். கடவுளை நம்பாத பரேஷ் ராவல் ஒரு பிரச்னையில் சிக்குகிறார். அவரை காப்பாற்ற கிருஷ்ணர்(அக்ஷய் குமார்) பூமிக்கு வருகிறார். இதுதான் படத்தின் கரு. படம் முழுக்க மூட நம்பிக்கைகளை தோலுரிக்கும் வசனங்கள், போலி சாமியார்களை தாக்கும் காட்சிகள் என விறுவிறுப்பாக திரைக்கதை நகரும். இதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இப்படத்தை பார்த்தவர், அதை ரீமேக் செய்ய முடிவு செய்து சமீபத்தில் மும்பைக்கு சென்று அக்ஷய்குமாரை சந்தித்தார் ஐஸ்வர்யா. சில நிறுவனங்களுடன் சேர்ந்து அக்ஷய்குமாரின் நிறுவனமும் படத்தை தயாரித்து இருப்பதால் அவரிடம் ரீமேக் உரிமை பற்றி ஐஸ்வர்யா பேசியதாக தெரிகிறது. அக்ஷய் குமார் நடித்த கிருஷ்ணர் வேடத்தில் தனது அப்பா ரஜினியை நடிக்க வைக்க ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளார். இது குறித்து ஐஸ்வர்யாவுக்கு நெருங்கியவர்கள் கூறும்போது, அக்ஷய்குமாருடன் தொடர்ந்து ஐஸ்வர்யா பேசி வருகிறார். ஓ மை காட் படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற விஷயங்கள் எதுவும் இன்னும் முடிவாகவில்லை என்றனர் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக