புதன், 21 நவம்பர், 2012

தமிழா? தெலுங்கா? குழப்பத்தில் அனுஷ்கா

அறிமுகமானாலும், 'அருந்ததீ' டப்பிங் படத்தின் மூலம் தமிழ் திரையுலகை அதிரவைத்தார் அனுஷ்கா. இருந்தாலும், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துவதை குறைத்துவிட்டு வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், தாண்டவம் என வரிசையாக தமிழ் திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தினை பிடித்த அனுஷ்காவிற்கு பழைய மாதிரி தெலுங்கு பட வாய்ப்புகள் வருவது இல்லையாம். தனது நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று மிகவும் வருத்தப்படுகிறாராம்.


தெலுங்கு மார்கெட்டை பிடிக்க அங்கு படங்களை ஒப்புக் கொள்ளலாம் என்றால், கோலிவுட்டில் கோலோச்ச ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா என இவரது இடத்தினை பிடித்துவிட மும்முனை போட்டி நடத்தி வருகிறார்கள். தமிழில் அனுஷ்கா நடிப்பில் வெளியான படங்கள் யாவுமே இவருக்கு பெரிதாக பெயர் வாங்கி தரவில்லை என்பதால் எந்தப் பக்கம் போவது என குழம்பியிருக்கிறாராம் அனுஷ்.

தற்போது தெலுங்கில் நாகார்ஜுன் உடன் நடித்து இருக்கும் DAMURUKAM படத்தினை நம்பி இருக்கிறார் அனுஷ்கா. அப்படத்தினை தொடர்ந்து, தெலுங்கிலாவது விட்ட இடத்தினை பிடித்து விட வேண்டும் என்று களத்தில் இறங்க தயாராகி வருகிறாராம்.

"தமிழில் 'இரண்டாம் உலகம்' படம் மட்டும் வரட்டும் அப்புறம் பாருங்கள் எனக்கு வரும் வாய்ப்பை.." என்று தனது நண்பர்களிடம் கூறி வருகிறாராம் அனுஷ்கா

0 கருத்துகள்:

கருத்துரையிடுக