திங்கள், 26 நவம்பர், 2012

டேம் பிரச்சனையால் நடிக்கும் வாய்ப்பை இழந்த யுவதி நடிகை.

ஹிட் கொடுத்த இயக்கங்க படங்கள்ல மட்டுமே நடிக்கறதுன்னு பஞ்ச் ஹீரோ முடிவு பண்ணியிருக்காராம்... இருக்காராம்... அவரோட டாடி கால்ஷீட் கேட்டப்பவும், ‘பெரிய இயக்கமா இருந்தா சொல்லுங்க, கால்ஷீட் தர்ரேன்’னு கண்டிஷன் போட்டாராம். பிறகுதான் பெரிய தொகைக்கு ஓ.கே. சொல்லி தாஸ் இயக்கத்த டாடி இயக்கம் அழைச்சிட்டு வந்தாராம். அடுத்து மதராஸ பட்டண இயக்கத்துல நடிக்க தலையாட்டிருக்கற நடிகர், பிரகாச ஹீரோ படத்த இயக்குன ஆனந்தமான இயக்கத்தோட கைகோர்க்க ஓ.கே சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...

கிரிக்கெட் பட வெங்கட இயக்கத்துக்கு நெறய படங்க வந்தாலும் தன்னோட அமர டாடிக்கு பாட்டு எழுத சான்ஸ் வரலையேன்னு வருத்தமாம்... வருத்தமாம்... சூப்பர் ஹிட் பாட்டெல்லாம் எழுதுன டாடிக்கு, மத்த எந்த கவிஞர விடவும் வேகமா பாட்டெழுதற திறமை இருக்குனு தெரிஞ்சதாலேதான் இயக்கற எல்லா படத்துலயும் பாட்டெழுத சான்ஸ் தர்றாராம். ஆனா மத்த இயக்கங்க ஏன் டாடிய கண்டுகறதில்லேனு புரியாம பிரண்ட்ஸுங்ககிட்ட சொல்லிச் சொல்லி வருத்தப்படுறாராம்... படுறாராம்...
‘யுவன யுவதி’ படத்துல நடிச்ச ரீமா கல்லி ஹீரோயினுக்கு கோலிவுட்ல சான்ஸே இல்லையாம்... இல்லையாம்... ‘அணை’ பட பிரச்னை வந்தப்ப மல்லுவுட் இன்டஸ்ரிக்கு ரொம்பவே சப்போர்ட்டா ஸ்டேட்மென்ட் விட்டதால கோலிவுட்காரங்க அவர ஒதுக்கிட்டாங்களாம். வெளிப்படையா பேசி கோலிவுட்காரங்கள பகைச்சிகிட்டதால மல்லுவுட்காரங்களும் அவர கண்டுகறதில்லையாம். எப்பவோ யாரோ விஷயம் தெரியாதவங்க படத்துல மட்டும் அத்திபூத்தா மாதிரி சான்ஸ் வருதாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக