ராட்டினம் படத்தில் அறிமுகமான ஸ்வாதி, தற்போது பாலசேகரன் இயக்கத்தில் ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் நடித்துள்ளார். |
இந்த இரண்டு படங்களிலும் கிளாமர் என்பதை சிறு அளவுக்கு கூட காட்டவில்லை. இந்நிலையில் ஸ்வாதியிடம் கதை சொன்ன இயக்குனர்கள், கதைக்கு கிளாமர் தேவைப்படுகிறது. அதனால் கொஞ்சம் இறங்கிவந்தால் தான் நல்லது என்று சொல்லி விட்டார்களாம். திறமை என்பதை மட்டுமே நம்பி இருக்கிறேன், கிளாமர் எதுக்கு என்று கூறிவந்த ஸ்வாதி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளாராம். அதாவது கதைக்கு அவசியம் என்றால் கிளாமராக நடிப்பேன் என்று கூறியுள்ளாராம். கவர்ச்சிக்கு தாவும் எல்லா நடிகைகளும் முதன்முதலாக பேசும் வழக்கமான வசனம் இதுதான் என முணுமுணுக்கும் இயக்குனர்கள் ஸ்வாதியை விதவிதமான மார்டன் உடைகளில் புகைப்படம் எடுத்து தள்ளுகின்றனராம். அதிலும் ஒருவர் அம்மணியை குத்து பாடலுக்கு ஆட வைக்கவும் ரகசியமாக திட்டமிட்டுள்ளாராம் |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக