திங்கள், 26 நவம்பர், 2012

துப்பாக்கியின் வெற்றியை ஜீரணிக்க முடியாத நடிகர்.

துப்பாக்கியின் வெற்றி பல ஹீரோக்களின் வயிற்றை பஞ்சராக்கியிருக்கிறது. அதிலும் முக்கியமாக ஒருவரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லையாம்.

தமிழ்சினிமாவின் அடுத்த ரஜினி நாம்தான் என்று விஜய் நினைத்துக் கொண்டிருந்த மாதிரியே, தமிழ்சினிமாவின் அடுத்த விஜய் நாம்தான் என்ற மிதப்பில் இருந்தவர் இவர். ஆனால் ரஜினியும் ரிட்டையராகவில்லை, விஜய்யும் வெற்றியை நழுவவிடவில்லை.

துப்பாக்கிக்காக விஜய் கொடுத்த பார்ட்டிக்கு எல்லா ஹீரோக்களுக்கும் அழைப்பு போனது. அதை நாசுக்காக தவிர்த்தார்கள் அத்தனை பேருமே. பார்ட்டிக்கு போன இயக்குனர்கள் சிலருக்கு மறுநாள் போன் போட்டு விசாரித்தாராம் இந்த ஹீரோ.

'அங்கு என்ன நடந்துச்சு. என்ன பேசிகிட்டாங்க' என்று இவர் விசாரித்த விசாரிப்பிலேயே பயங்கர பொசுங்கல் வாடையாம். துப்பாக்கி கதையை முதலில் வேண்டாம் என்று கூறிய தனது ஏழாம் அறிவை இப்போதாவது நொந்து கொண்டிருப்பார் இந்த ஹீரோ

0 கருத்துகள்:

கருத்துரையிடுக