By.Rajah.நடிகர் பிரசாந்திற்கும், தி.நகர் தொழிதிபர் மகள் கிரகலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் கிரகலட்சுமிக்கும் வேணுபிரசாத் என்பவருக்கம் ஏற்கெனவே திருமணம் நடந்திருப்பதும், விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அதை மறைத்து கிரகலட்சுமி பிரசாந்த்தை திருமணம் செய்திருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பிரசாந்த் கிரகலட்சமி மீது தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குடும்ப நல நீதி மன்றமும், ஐகோர்ட்டும், கிரகலட்சுமி ஏமாற்றி திருமணம் செய்ததை உறுதி செய்து, அவர்கள் திருமணம் செல்லாது என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்புகளை எதிர்த்தும், பிரசாந்த்துக்கும் தனக்குமான திருமணத்தை ஏற்று, விவாகரத்து வழங்குமாறு கிரகலெட்சுமி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும், திருமணத்தை செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டது. மேலும் பிரசாந்த், கிரகலட்சுமி மற்றும் அவர்களது குடும்பத்தார் மீது தொடர்ந்துள்ள சொத்து மோசடி வழக்குகளையும், பிரசாந்தின் குழந்தை யாரிடம் இருக்க வேண்டும் என்பதையும் மனிதாபிமான அடிப்படையில் வழக்கறிஞர்கள் பேசித் தீர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த தீர்ப்பையொட்டி பிரசாந்த் தனது வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார். "என் மகன் சட்டப்படி பிரம்மச்சாரி ஆகிவிட்டான். அவனுக்கு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைப்பதுதான் என் முதல் கடமை" என்று பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கூறினார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக