வெள்ளி, 30 நவம்பர், 2012

திரைப்படமாகும் வைரமுத்துவின் தண்ணீர் தேசம் நாவல்

தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்வரிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வருகிறது.
முதன்முறையாக வைரமுத்து எழுதிய புகழ்பெற்ற நாவலான தண்ணீர் தேசம் விரைவில் திரைப்படமாக உள்ளது.
பிரபல வாரபத்திரிக்கையில் தொடராக வெளிவந்து பல லட்சக்கணக்கான வாசகர்களின் பாராட்டுகளைப் பெற்றது இந்த நாவல்.
1996 இல் புத்தகமாக வெளியிடப்பட்டு இன்று வரை 18 பதிப்புகள் கண்டு விற்பனையிலும் சாதனை படைத்திருக்கிறது.
கடற்பரப்பில் பல சாகசங்களுக்கிடையே நடக்கும் காதல் கதையினைச் சொல்லும் தண்ணீர் தேசம் அந்தத் தலைப்பிலேயே திரைப்படமாக்கப்படுகிறது.
ரெட் எர்த் மூவிஸ் புரொடக்ஷன்ஸ் என்கிற மலேசிய நிறுவனத்தின் சார்பில் நிவாஸ் ராகவன் -யுவராஜ் செளமா ஆகியோர் தண்ணீர் தேசத்தைத் தயாரிக்கிறார்கள்.
நாவலை எழுதிய வைரமுத்துவே படத்திற்கு கதை- வசனம் மற்றும் பாடல்களையும் எழுதுகிறார்.
இப்படத்தை ஷிவன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே வேறு மொழிகளில் சில வெற்றிப் படங்களை இயக்கியவர். தமிழில் இது இவருக்கு முதலாவது படம்.
இந்தப் படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவிடம் இணை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.
எங்கேயும் எப்போதும் இசையமைப்பாளர் சத்யா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தூத்துக்குடி, அந்தமான் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஜனவரி 2013ல் முற்றிலும் புதுமுகங்களோடு தொடங்கவிருக்கும் தண்ணீர் தேசம் படத்திற்கு கதாநாயகன், கதாநாயகி தெரிவு நடைபெற்று கொண்டிருக்கிறது.

லாரன்ஸ் ஜோடியாகிறார் டாப்சி

கொலிவுட்டில் முனி, முனி– 2 (காஞ்சனா) படங்களை இயக்கி நடித்தார் ராகவா லாரன்ஸ்.
கொமெடி கலந்த இந்த திரில் படங்கள் வெற்றி பெற்றதையடுத்து இவர் முனி-3ம் பாகத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக நடிகை லட்சுமிராய் நடிப்பதாக கூறப்பட்டது.
இவர் இதற்கு முந்தைய பாகமான காஞ்சனாவில் நடித்திருந்தார்.
ஆனால் இந்த வாய்ப்பு ஆடுகளம் படத்தில் நடித்த டாப்சிக்கு கிடைத்துள்ளது.
ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இப்படம் மிக பிரமாண்டமாக தயாராகிறது

முதன் முறையாக அஜீத்துடன் இணையும் தமன்னா

சிவா இயக்கத்தில் விஜயா Productions நிறுவனத்தின் சார்பில் உருவாகும் புதிய படத்திற்கு அஜீத்தின் ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளாராம்.
இப்படம் குறித்து இயக்குனர் சிவா கூறுகையில், நான் அஜீத்தின் தீவிர ரசிகன். இப்படத்தில் முதன் முறையாக அஜீத்தும், தமன்னாவும் இணைய உள்ளனர்.
தயாரிப்பாளர்கள் தங்கள் நிறுவனத்தின் பாரம்பரியத்திற்கு ஏற்ப அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் படம் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தில் விதார்த், பாலா, முனீஷ், சோஹில் போன்ற இளம் நாயகர்களுடன் அஜீத்தும் இணைந்து நடிக்க உள்ளார்.
இப்படத்தில் வரும் ஜெயராம், சந்தானத்தின் நகைச்சுவை பெரிதளவில் பேசப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் உருவாகும் பாடல்கள் அஜீத் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தளிக்கும்.
மறைந்த திரு நாகி ரெட்டி அவர்களின் நூற்றாண்டு வருடத்தில் இப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்றே கூறுவேன்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தான் என்றாலும், பாடல் பதிவு வருகிற டிசம்பர் மாதம் 2ஆம் திகதி திரு நாகி ரெட்டி அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாளில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 29 நவம்பர், 2012

துப்பாக்கி - கோட்டை விடப்பட்ட லாஜிக்குகள்!


 



துப்பாக்கி படம் ரிலீஸ் ஆகி வசூலில் பட்டையைக் கிளப்புவது நம்ம எல்லோருக்கும் தெரியும். ஏற்கனவே துப்பாக்கி பட விமர்சனம்கொடுத்திருந்தோம். இப்போ அதில் கோட்டைவிடப்பட்ட லாஜிக்குகளைப் பார்ப்போம்.
  • விஜய் வீட்டிலிருந்து தப்பிக்கும் தீவிரவாதியைப்பற்றி தன் 12 நண்பர்களுடன் விவரிக்கும் விஜய் தமிழில் விவரிக்கிறார். வட இந்தியர் மற்றும் சிங்குகளுக்கெல்லாம் எப்படித் தமிழ் தெரியும்? (வேறு இடங்களில் ஆங்கிலம்/ஹிந்தி கொடுத்துததுபோலவே இங்கும் கொடுத்திருக்கலாம்
  • படத்தின் முக்கிய இடமான விஜயும் அவரது 12நண்பர்களும் தீவிரவாதிகளைக் கொல்ல பிரிவது அப்பட்டமான லாஜிக் மீறல். விஜயின் கூற்றுப்படி ஒருவன் இன்னொருவனை சந்திப்பான் அப்போது 12 பேர் 6,6பேராக பிரிந்து இருவரையும் பின்தொடர வேண்டும். (1:12)பிறகு(1:6) (1:6) பின்(1:3) (1:3) (1:3)(1:3) இதற்குமேல் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொருவரையும் எப்படி தொடர முடியும்? அப்படித் தொடரும்போது ஒருவர் ஒரு தீவிரவாதியையும், மற்ற இரண்டுபேர் இன்னொரு தீவிரவாதியையும் தொடர்கிறார்கள். 2பேர் தொடரும் தீவிரவாதி யாரையும் சந்திக்காமல் ஒருவர் மட்டுமே தொடரும் அந்த ஒரு தீவிரவாதி இன்னொரு தீவிரவாதியைச் சந்தித்தால் பின் தொடர ஆளில்லையே?மொத்தம் 4குரூப்பில் எப்படியும் இது மாறிப்போய்விடுமே? (நமக்கு கடைசியாக 1:1 வர வேண்டும். 8 இடத்தில் பாம் வைப்பதாகக் கொண்டிருந்தால் மட்டுமே இது சரியாக வரும்)
  • சின்னச்சின்ன லாஜிக்குகளை எல்லாம் விட்டுவிடலாம்.பெண்பார்க்கும்போது ஆச்சாரமான உடையணிந்து வருவதாகக் காட்டப்படும் காஜல் முதுகு முழுவதும் தெரிவதுபோல் உடையணிந்திருப்பது, 12 தீவிரவாதிகளைச் சுடும்போது எல்லோருடைய துப்பாக்கியிலும் சைலன்சர் போடாதது. (பொதுமக்கள் மத்தியில் வீண் குழப்பங்கள், பதற்றம் தவிர்க்கப்படுமே?)கிளைமாக்ஸில் விஜய் தன கடைசி ஆசையாய் “அடிவாங்கியே சாகணும்” என்பதற்தெல்லாம் தீவிரவாதிகள் ஒத்துக்கொள்வது என்ன லாஜிக்கோ?

டிஸ்கி: இந்த ஒரு பாட்டுக்காகவே எல்லாவற்றையும் மறந்துவிடலாம். “அண்டார்டிகா” பாடலில் வரிகள், நடனம், இசை, ஒளிப்பதிவு, நகைச்சுவை,எக்ஸ்ப்ரசன், படமாக்கிய விதம் என எல்லாமே 100%.நிஷாஆஆவுக்காகவே 100 முறைக்குமேல் இந்தப் பாட்டை பார்த்துட்டேன் J

“பாக்ஸர் நிஷான்னு சாஸ்திரி நகர்ல கேட்டுப்பாரு!”

சரத்குமாரின் இன்னோர் மகளும் ஹீரோயினா

 

 
சினிமாவில என்னென்னமோ நடக்குதில்லே!!
நம்ம சரத்குமாரின் கம்பீரம் படத்துல பேபி நடிகையாக அறிமுகமானவர் தான் சரத்குமாரின் புதல்வி மனீஷாஜித். இப்போது கால மாற்றத்தில அவங்களும் பெரியாள் ஆகி, இப்போது நண்பர்களின் கவனத்திற்கு எனும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறாரு.
ஏலவே மூத்த மகள் வரலட்சுமி சிம்புடன் போடா போடியில் டான்சராக அறிமுகமானர். இப்போது விஷாலுடன் நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்காரு. இந் நிலையில் சரத்தின் மற்றுமோர் மகளும் களமிறங்கியிருப்பது கோடம்பாக்கத்தின் அடுத்த லேட்டஸ் நியூஸ் தகவலாக மாறியிருக்கிறது.

 



ஒரு பச்சக் குழந்தய சினிமாவில இப்பவே இறக்கிட்டாங்களே!!

கவர்ச்சிக்கு மாறிய ஸ்வாதி

ராட்டினம் படத்தில் அறிமுகமான ஸ்வாதி, தற்போது பாலசேகரன் இயக்கத்தில் ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களிலும் கிளாமர் என்பதை சிறு அளவுக்கு கூட காட்டவில்லை.
இந்நிலையில் ஸ்வாதியிடம் கதை சொன்ன இயக்குனர்கள், கதைக்கு கிளாமர் தேவைப்படுகிறது. அதனால் கொஞ்சம் இறங்கிவந்தால் தான் நல்லது என்று சொல்லி விட்டார்களாம்.
திறமை என்பதை மட்டுமே நம்பி இருக்கிறேன், கிளாமர் எதுக்கு என்று கூறிவந்த ஸ்வாதி தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளாராம்.
அதாவது கதைக்கு அவசியம் என்றால் கிளாமராக நடிப்பேன் என்று கூறியுள்ளாராம்.
கவர்ச்சிக்கு தாவும் எல்லா நடிகைகளும் முதன்முதலாக பேசும் வழக்கமான வசனம் இதுதான் என முணுமுணுக்கும் இயக்குனர்கள் ஸ்வாதியை விதவிதமான மார்டன் உடைகளில் புகைப்படம் எடுத்து தள்ளுகின்றனராம்.
அதிலும் ஒருவர் அம்மணியை குத்து பாடலுக்கு ஆட வைக்கவும் ரகசியமாக திட்டமிட்டுள்ளாராம்

புதன், 28 நவம்பர், 2012

கிளைமாக்ஸிற்கு சனாகானால் வந்த வினை!

சிலம்பாட்டம் சனாகான் ஒரே மொழியை மட்டுமே நம்பி இருக்காமல் பல மொழிகளிலும் பரவலாக
நடித்து வருகிறார். தமிழைப்பொறுத்தவரை பயணம் படத்துக்குப்பிறகு சரியான படங்கள் அமையாததால் மலையாளத்தில் பிசியாகி விட்டார். அதில் கிளைமாக்ஸ் என்ற படம் முக்கியத்துவம் வாய்ந்தது. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் வித்யாபாலன் நடித்த த டர்ட்டி பிக்சர்ஸ் படம்தான் மலையாளததில் க்ளைமாக்ஸ் ஆகியிருக்கிறது. இந்த படத்தில் வித்யாபாலனை மிஞ்சும் அதிரடி நடிகையாக உருவெடுத்திருக்கிறார் சனாகான். அதனால் அவர் கேட்ட சம்பளத்தை வாரி வழங்கியுள்ளனர். ஆனால் இதுவரை முழு வீச்சில் அப்படத்தில் நடித்து வந்த சனாகான், கடைசி க்ளைமாக்ஸ் காட்சியை படமாகும் நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொள்ள வேண்டியிருப்பதாக சொல்லி, படக்குழுவை டீலில் விட்டுள்ளாராம. அதனால் அடுத்த மாதத்தில் படத்தை வெளியிடலாம் என்று திட்டமிட்டிருந்தவர்கள், இப்போது சனாகாவின் திடீர் மாற்றம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியையும் பிப்ரவரிக்கு மாற்றி வைத்துள்ளனர்

வேதிகாவை நோகடித்த பரதேசி பாலா!

டைரக்டர் பாலா இயக்கியுள்ள பரதேசி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் வேதிகா.
அவரைப்பொறுத்தவரை இது கிடைப்பதற்கரிய வாய்ப்பு என்பதால் காடு, மலை, வெயில் என்று பாராமல் மாதக்கணக்கில் பாலாவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக்கொடுத்திருக்கிறார். கூடவே இந்த படத்தில் வேதிகாவின் இயல்பான நடிப்புக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதனால் பரதேசி தனக்கு நல்லதொரு அங்கீகாரத்தை தரும் என்று மனசு நிறைய நம்பிக்கையுடன் இருக்கிறார் வேதிகா. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதையடுத்து நடந்த மிரஸ்மீட்டில், அழகான நடிகையான வேதிகாவை, இப்படி அசிங்கமான நடிகையாக்கி விட்டீர்களே? என்று கேள்விகள் எழுந்தபோது,கதாபாத்திரத்திற்கு மேட்சாக வேண்டும் என்பதற்காக அவரது உடம்பு முழுக்க கருப்பு வண்ணம் பூசி படமாக்கியிருக்கிறேன். மற்றபடி வேதிகா ஒன்றும் பெரிய அழகி இல்லை. சுமாரான பொண்ணுதான் என்று பதில் சொன்னார் பாலா. ஆனால் அவரது எந்த யதார்த்தமான பதிலைக்கேட்டு அதுவரையில் தவுசண் வாட்ஸ் பல்பமாக பிரகாசித்த வேதிகாவின் முகம் திடீரென்று சுருங்கிப்போனது. தனியாக விட்டால் குலுங்கி குலுங்கி அழுதுவிடும் கண்டிசனில் மேடையில் அமர்ந்திருந்தார்.


செவ்வாய், 27 நவம்பர், 2012

கிராமத்து பெண் வேடங்களில் கலக்கும் இனியா

வாகை சூட வா படத்தில் கிராமத்து பெண்ணாக அறிமுகமாகி, தன் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் இனியா.
இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான அம்மாவின் கைப்பேசி என்ற படத்திலும் கிராமத்து பெண்ணாக வந்தார்.
இதில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, ரசிகர்களிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இப்படத்தில் தனக்கு விருது கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.
தொடர்ந்து கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் இனியா

மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் காஜல்

நாயகி காஜல் அகர்வாலுக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் ஆதரவு குவிந்து கொண்டே வருகிறதாம்.
இவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி விட்டதால் உற்சாகத்தில் சிறகடித்து பறக்கிறார் காஜல்.
இதுவரை எந்தவொரு தென் இந்திய நடிகைக்கும் இந்த அளவுக்கு பேஸ்புக்கில் ஆதரவு குவிந்தது இல்லை என கூறும் அவர், ரசிகர்களையும், என்னையும் இணைக்கும் பாலமாக பேஸ்புக் திகழ்கிறது.
என்னுடைய படம், நடிப்பு, உடைகள், பலம், பலவீனம் ஆகியவற்றை பேஸ்புக் வாயிலாக ரசிகர்கள் உடனுக்குடன் தெரிவிக்கின்றனர்.
இதனால் அடுத்த படத்தில் நடிக்கும் போது முந்தைய படத்தில் இருந்த குறைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடிகிறது.
இது எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது என மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறாராம் காஜல்.
துப்பாக்கி படத்துக்கு கிடைத்த வெற்றி தான் இதற்கு காரணமாம். தமிழை தவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதால், உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறாராம் காஜல் அகர்வால்.

நெல்லை தமிழ் பேச தயாராகும் அஜித்

தமிழ்நாட்டில் அல்வாவுக்கு புகழ்பெற்ற திருநெல்வேலி தமிழ் பேச நடிகர் அஜித் பயிற்சி எடுத்து வருகிறார்.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் அஜித் குமார், அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது.
அப்போதே அஜித் இதில் கலந்து கொண்டு நடிக்கத் தொடங்கிவிடுவார்.
படத்தின் கதைக்களம் பெரும்பாலும் திருநெல்வேலியை பிரதானமாக கொண்டே எழுதப்பட்டிருக்கிறது.
எனவே முக்கிய காட்சிகள் அங்குதான் படமாகிறது. அதோடு, படத்தின் வசனங்களையும் நெல்லை தமிழில் அட்சரசுத்தமாக எழுதியுள்ளனர்.
அதனால், அஜீத்தும் திருநெல்வேலி தமிழை உள்வாங்கி பேசி, நடிக்க தன்னை தயார்படுத்தி வருகிறார்.

ஷாமின் 6 படத்தின் இசை 5ம் திகதி வெளியீடு

நடிகர் ஷாம் நடிக்கும் ‘6’ என்ற படத்தின் இசை வெளியீட்டை டிசம்பர் 5ம் திகதி நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படத்தில் ஷாமுக்கு ஜோடியாக பூனம் கவுர் நடிக்கிறார். இப்படத்தை V.Z.துரை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
6 படத்திற்காக ஷாம் உடற்பயிற்சிகள் செய்து தனது தோற்றத்தை யாரும் அடையாளம் கண்டு கொள்ளமுடியாதபடி மாற்றினார்.
படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கி பல்வேறு மாநிலங்களில் பயணப்படுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், இசை வெளியீட்டை வரும் டிசம்பர் 5ம் திகதி நடத்த முடிவு செய்துள்ளார்கள்.
அதன்படி சென்னை சத்யம் திரையரங்கத்தில் இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெறவிருக்கிறது.
இவ்விழாவில் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவிருக்கின்றனர்

திங்கள், 26 நவம்பர், 2012

துப்பாக்கியின் வெற்றியை ஜீரணிக்க முடியாத நடிகர்.

துப்பாக்கியின் வெற்றி பல ஹீரோக்களின் வயிற்றை பஞ்சராக்கியிருக்கிறது. அதிலும் முக்கியமாக ஒருவரால் அதை ஜீரணிக்கவே முடியவில்லையாம்.

தமிழ்சினிமாவின் அடுத்த ரஜினி நாம்தான் என்று விஜய் நினைத்துக் கொண்டிருந்த மாதிரியே, தமிழ்சினிமாவின் அடுத்த விஜய் நாம்தான் என்ற மிதப்பில் இருந்தவர் இவர். ஆனால் ரஜினியும் ரிட்டையராகவில்லை, விஜய்யும் வெற்றியை நழுவவிடவில்லை.

துப்பாக்கிக்காக விஜய் கொடுத்த பார்ட்டிக்கு எல்லா ஹீரோக்களுக்கும் அழைப்பு போனது. அதை நாசுக்காக தவிர்த்தார்கள் அத்தனை பேருமே. பார்ட்டிக்கு போன இயக்குனர்கள் சிலருக்கு மறுநாள் போன் போட்டு விசாரித்தாராம் இந்த ஹீரோ.

'அங்கு என்ன நடந்துச்சு. என்ன பேசிகிட்டாங்க' என்று இவர் விசாரித்த விசாரிப்பிலேயே பயங்கர பொசுங்கல் வாடையாம். துப்பாக்கி கதையை முதலில் வேண்டாம் என்று கூறிய தனது ஏழாம் அறிவை இப்போதாவது நொந்து கொண்டிருப்பார் இந்த ஹீரோ

அஜீத் நடிக்கும் புதிய படத்திற்கு 'தல'என்ற பெயர் வைக்க கடும் எதிர்ப்பு

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ‘தல’ என தலைப்பு வைக்க முயற்சி நடக்கிறது. அஜீத்தை ரசிகர்கள் 'தல' என பட்ட பெயரிட்டு அழைக்கின்றனர். படங்களிலும் அவரை 'தல' என்று சக நடிகர்கள் சொல்வதுபோல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
மும்பையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்துக்கு பல மாதங்களாக தலைப்பு வைக்காமல் உள்ளது. நிறைய தலைப்பு தேர்வு செய்து இறுதியில் பொருத்தமாக இல்லை என்று ஒதுக்கி விட்டனர்.
இந்த நிலையில் ‘தல’ என்ற தலைப்பை படத்துக்கு வைக்கலாம் என எழுத்தாளர் சுபா யோசனை சொன்னார். இயக்குனருக்கும் அது பிடித்தது. ஆனால் அஜீத் அதை ஏற்கவில்லை. கதைக்கு தேவையான தலைப்பை தேர்வு செய்து வையுங்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் எதுவும் செய்யாதீர்கள்.
‘தல’ பெயர் வைக்க வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டார். அப்போது அவர்கள் மனதில் அஜீத் ரொம்ப உயர்வாக தெரிந்தாராம். ஏற்கனவே தனது பெயரில் ரசிகர் மன்றம் வேண்டாம் என்று அஜீத் கலைத்து விட்டார். சம்பாதித்து பெற்றோருக்கு உதவுங்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

டேம் பிரச்சனையால் நடிக்கும் வாய்ப்பை இழந்த யுவதி நடிகை.

ஹிட் கொடுத்த இயக்கங்க படங்கள்ல மட்டுமே நடிக்கறதுன்னு பஞ்ச் ஹீரோ முடிவு பண்ணியிருக்காராம்... இருக்காராம்... அவரோட டாடி கால்ஷீட் கேட்டப்பவும், ‘பெரிய இயக்கமா இருந்தா சொல்லுங்க, கால்ஷீட் தர்ரேன்’னு கண்டிஷன் போட்டாராம். பிறகுதான் பெரிய தொகைக்கு ஓ.கே. சொல்லி தாஸ் இயக்கத்த டாடி இயக்கம் அழைச்சிட்டு வந்தாராம். அடுத்து மதராஸ பட்டண இயக்கத்துல நடிக்க தலையாட்டிருக்கற நடிகர், பிரகாச ஹீரோ படத்த இயக்குன ஆனந்தமான இயக்கத்தோட கைகோர்க்க ஓ.கே சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்...

கிரிக்கெட் பட வெங்கட இயக்கத்துக்கு நெறய படங்க வந்தாலும் தன்னோட அமர டாடிக்கு பாட்டு எழுத சான்ஸ் வரலையேன்னு வருத்தமாம்... வருத்தமாம்... சூப்பர் ஹிட் பாட்டெல்லாம் எழுதுன டாடிக்கு, மத்த எந்த கவிஞர விடவும் வேகமா பாட்டெழுதற திறமை இருக்குனு தெரிஞ்சதாலேதான் இயக்கற எல்லா படத்துலயும் பாட்டெழுத சான்ஸ் தர்றாராம். ஆனா மத்த இயக்கங்க ஏன் டாடிய கண்டுகறதில்லேனு புரியாம பிரண்ட்ஸுங்ககிட்ட சொல்லிச் சொல்லி வருத்தப்படுறாராம்... படுறாராம்...
‘யுவன யுவதி’ படத்துல நடிச்ச ரீமா கல்லி ஹீரோயினுக்கு கோலிவுட்ல சான்ஸே இல்லையாம்... இல்லையாம்... ‘அணை’ பட பிரச்னை வந்தப்ப மல்லுவுட் இன்டஸ்ரிக்கு ரொம்பவே சப்போர்ட்டா ஸ்டேட்மென்ட் விட்டதால கோலிவுட்காரங்க அவர ஒதுக்கிட்டாங்களாம். வெளிப்படையா பேசி கோலிவுட்காரங்கள பகைச்சிகிட்டதால மல்லுவுட்காரங்களும் அவர கண்டுகறதில்லையாம். எப்பவோ யாரோ விஷயம் தெரியாதவங்க படத்துல மட்டும் அத்திபூத்தா மாதிரி சான்ஸ் வருதாம்

அனாமிகா நடிக்கும் பெண் ஒன்று கண்டேன்.

போபால் அழகி பட்டம் வென்ற அனாமிகா தமிழில் நடிக்கிறார். ‘பெண் ஒன்று கண்டேன்’ படத்தில் அறிமுகமாகிறார் அனாமிகா. இப்படம் பற்றி இயக்குனர் சஞ்சீவ் சீனிவாஸ் கூறியதாவது: தகுதிக்கு மீறிய காதலில் சிக்கி தவிக்கும் இளைஞன் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் உணர்வுபூர்வமான சம்பவங்கள்தான் கதை.
ஜெ.வி.அஸ்வின்ராஜ் ஹீரோ. மிஸ் போபால் பட்டம் வென்ற அனாமிகா ஹீரோயின். கஸ்தூரி, யுக்தி சக்திவேல், சஞ்சய் தனேஜா, தேனி முருகன், மீனா, நதிஷா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் தேனி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேக்கடி, மூணாறு, வருசநாடு, சென்னை ஆகிய இடங்களில் நடந்துள்ளது.
பெரும்பாலான பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. தேனி, உசிலம்பட்டி பகுதிகளில் ஷூட்டிங் நடந்தபோது எங்காவது ஒரு இடத்தில் கேமராவை மறைத்து வைத்து ஷூட்டிங் நடத்துவோம். யாரோ ஒரு தொழிலாளிபோல் ஹீரோ அஸ்வின் பஸ் நிலையத்தில் பஸ் துடைப்பது, கடையில் வேலை செய்வது என யதார்த்தமாக நடித்துக் கொண்டிருப்பார். சுமார் 10 நாட்கள் இப்படியே சென்றது. அங்கிருப்பவர்கள் யாரோ புதுசா ஒரு ஆள் வேலை செய்கிறானே என்பதுபோல் பார்ப்பார்கள்.
10 நாளைக்கு பிறகுதான் ஷூட்டிங் நடக்கிறது என்று அங்கிருந்தவர்களுக்கு தெரியவந்தது. தயாரிப்பு பிரின்ஸ் கல்லாத். ஒளிப்பதிவு சபீர். இசை பொன்ராஜ். இவ்வாறு சஞ்சீவ் சீனிவாஸ் கூறினார்

நடிப்பா, திருமணமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறேன்

திருமணம் செய்துகொள்ளும்படி பாட்டி வற்புறுத்துகிறார். ஆனால், இதில் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறேன்’ என்கிறார் நடிகை பிரியா ஆனந்த். ‘வாமனன்’, ‘நூற்றெண்பது’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ போன்ற படங்களில் நடித்தவர் பிரியா ஆனந்த்.
இவர் அடுத்து பிரியதர்ஷன் இயக்கும் ‘ரங்கிரிஸ்’என்ற இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையே, பிரியாவை திருமணம் செய்துகொள்ளும்படி அவரது பாட்டி வற்புறுத்துகிறாராம். இதுபற்றி பிரியா ஆனந்த் கூறியதாவது: எனது பாட்டியை மிகவும் நேசிக்கிறேன். அவர் என்றால் எனக்கு உயிர்.
அவர்தான் எனக்கு எல்லாம். எனக்கு வரப்போகும் கணவர் என் பாட்டியை நன்கு புரிந்துகொள்பவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நான் மணப்பேன். யாரையாவது காதலிக்கிறீர்களா என்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. நான் தனி ஆளாகத்தான் இருக்கிறேன். இப்போது நடிப்பு மீதுதான் எனது கவனம் முழுவதும் இருக்கிறது.
ஆனால், திருமணம் செய்துகொள்ளும்படி என்னை பாட்டி வற்புறுத்துகிறார். ஒரு பெண்ணின் வாழ்வை முழுமையாக்குவது ஒரு ஆண்தான் என்று அவர் கூறுகிறார். நடிப்பா, திருமணமா என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறேன்

சனி, 24 நவம்பர், 2012

சூப்பர் சிங்கர் 23 நவ., 2012 { காணொளி

உங்கள் கண்களுக்கும் உள்ளத்திற்கும் பார்த்து ரசி க்க கூடிய ஓர் அருமை யான நிகழ்சி

போடா போடி. விமர்சனம்

 

 
 
சிம்பு என்றாலே விளக்கெண்ணெய் குடித்தாற்போல் முகத்தைச் சுழிப்பது பொதுவான ரசிகர்களின் வழக்கம். சிம்புவுக்கு மட்டும்தான் அவரது ரசிகர்களைத் தவிர மற்ற நடிகர்களின் ரசிகர்களின் பேராதரவு கிடைப்பதில்லை.. இதனால்தான் அவரும் தனக்குப் பிடித்த நடிகர் ‘தல’தான் என்று பல முறை சொல்லிச் சொல்லி ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்..!

ஆனால் படங்கள்தான் தாறுமாறாக வந்து கொண்டிருக்கின்றன.. கடைசியாக வந்த ‘ஒஸ்தி’ படத்தினால் அதன் தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்களுக்கு இன்னமும் கிஸ்தி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த ‘போடா போடி’ திரைக்கு வருமா வராதா என்ற சந்தேகம் நமக்கு மட்டுமல்ல.. இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கே இருந்து வந்திருக்கிறது..! கடைசியில் வழக்கம்போல எல்லா தரப்பு பஞ்சாயத்துக்களையும் சந்தித்துவிட்டே சந்திக்கு வந்திருக்கிறது இந்தப் படம்.

என்ன சொல்ல..? ராமராஜன் படங்களில்தான் கடைசியாக பார்த்தது... இது போன்ற ஆணாதிக்க வெறியை..! தமிழ், தமிழ்க் கலாச்சாரம், பெண், தாலி, புருஷன் என்று அக்மார்க் பி கிரேடு கதையை அப்படியே லண்டனுக்குக் கொண்டு சென்று அதனுடன் லவ்வையும் திணித்து கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அலட்சியமாக ஒரு படத்தைத் தயாரித்துத் தந்திருக்கும் இந்த்த் தைரியம் தமிழ்ச் சினிமாவில் சிம்புவைத் தவிர வேறு யாருக்கும் வராதுதான்..!

வரலட்சுமி ஒரு டான்ஸர். டான்ஸ் என்றால் உயிராக இருப்பவர். இவருடைய வாழ்க்கையில் திடீரென்று குறுக்கிடுகிறார் சிம்பு.. சிம்புவின் பொய்யான அலட்டல்களை உண்மை என்று நம்பி ஐ லவ் யூ சொல்லிவிடுகிறார் வரலட்சுமி. உடனேயே ஏத்துக்குறது ஆம்பளைத்தனம் இல்லியேன்னு கொஞ்சம் சுத்த விட்டுட்டு அப்புறமா இவரும் ஏத்துக்குறாரு.. கல்யாணமும் செஞ்சுக்குறாங்க.. இப்பவும் வரு, டான்ஸை விடலை.. இது சிம்புவுக்கு பிடிக்கலை. புள்ளை பொறந்துட்டா டான்ஸ் ஆட முடியாதுன்னு வீணாப் போன சித்தப்பன் கணேஷ் பத்த வைக்க.. அந்த வேலையையும் செஞ்சு முடிக்கிறார் சிம்பு.. குழந்தையும் பிறக்கிறது. இப்போது சிம்புவின் இந்த தில்லாலங்கடி வேலை வருவுக்கு தெரிய வர.. அவர் கோபிக்கிறார். அந்த நேரத்தில் நடந்த ஒரு விபத்தில் குழந்தை உயிரிழக்க.. இருவரும் தற்காலிகமாக பிரிகிறார்கள்.

வரு டான்ஸில் மூழ்கிப் போய் வாழ்க்கையை மறந்து போய் இருக்க.. சிம்புவால் முடியவில்லை. மீண்டும் வருவை தேடிச் சென்று அழைக்கிறார். வருவும் வருகிறார். சில கண்டிஷன்களோடு.. தன்னுடைய நீண்ட நாள் கனவான டான்ஸ் போட்டியில் ஜெயிக்கணும்ன்னு நினைச்சு பல முயற்சிகள் செஞ்சுக்கிட்டிருக்காரு வரு.. அதுலேயும் அவ்வப்போது மண்ணையள்ளிப் போட்டு கெடுக்குறாரு சிம்பு.. கடைசியா அந்தப் போட்டில வரு கலந்துக்கிட்டா மட்டுமே தன்னோட இருப்பாங்கன்றதால சிம்புவும் கூட சேர்ந்து டான்ஸ் ஆடுறாரு.. ஜெயிக்கிறாங்க..! கடைசி சீன்ல இன்னமும் 14 ஆட்டம் இருக்குன்னு வரு சொல்ல.. இனிமே எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்ன்னுட்டு பெட்ரூம் கதவைச் சாத்தி நம்மளை வீட்டுக்கு அனுப்பிர்றாரு சிம்பு.. இம்புட்டுத்தான் கதை..!

சிம்பு தோன்றும் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் காட்சிக்கு காட்சி, ஷாட்டுக்கு ஷாட் அவர்தான் தோன்றுகிறார்.. அவரேதான் அதிகம் பேசுகிறார். சில இடங்களில் மாடுலேஷனிலேயே சிரிப்பை வரவழைத்திருக்கிறார். உடன் இருக்கும் சித்தப்பா கணேஷை பல இடங்களில் வாரி விடுவது குபீர் சிரிப்பு ரகம்..! நன்றாகவே டான்ஸ் ஆடுகிறார்.. அவ்வப்போது பன்ச் டயலாக்கும் அடிக்கிறார். தமிழ் கலாச்சாரம் பத்தி கிளாஸ் எடுக்கிறார். “பொண்ணை கட்டிப் பிடிக்கிறவன்.. முத்தம் கொடுக்கிறவனையெல்லாம் செருப்பாலேயே அடிக்கணும்”னு சிம்புவே சொல்றதுதான் ரொம்ப ரொம்பக் கொடுமை.. இதைக் கேட்பாரே இல்லையா..?

நாமெல்லாம் தமிழர்கள்.. தமிழ்க் கலாச்சாரப்படி வாழணும்ன்னு நமக்கே அட்வைஸ் பண்றாரு.. பொண்டாட்டி காலைல எந்திரிச்சவுடனேயே புருஷன் காலை தொட்டுக் கும்பிடணும்ன்னு மணாளனே மங்கையின் பாக்கியம் காலத்துக்கே கூட்டிட்டுப் போயிட்டாரு..! என்னாச்சுன்னு தெரியலை.. ஒருவேளை தமிழகத்து பெண்கள் மத்தில தனக்கு நல்ல பேரு கிடைக்கணும்ன்னு சொல்லி முயற்சி பண்றாரோ..? என்ன செஞ்சாலும் சரி.. இந்தப் படம் கடைசிவரையிலும் ஆணாதிக்கத்தனத்தை போதிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை..!

வரலட்சுமி பாலே நடனத்தை முறைப்படி பயின்றவர்.. அனைத்து வகை நடனங்களும் அத்துப்படியாம். அதனாலேயே நடனக் காட்சிகளில் பிசகில்லாமல் ஆடியிருக்கிறார்.. இறுதியில் குத்துப் பாட்டிலும் அவரைக் களத்தில் இறக்கி ஆட விட்டிருக்கிறார்கள். சிம்பு படத்துல இது கூட இல்லைன்னாத்தான் பிரச்சினை..! வரலட்சுமியின் குரல் வித்தியாசமாக இருந்தாலும் ஆம்பளை குரல் போல இருப்பது கேட்க முடியவில்லை.. கொஞ்சம்ன்னாலும் பரவாயில்லை. படம் முழுக்கன்னா எப்படிங்க..? நடிப்பு..! ம்.. பரவாயில்லை ரகம்தான்.. காதலைத் தவிர மற்றதெல்லாம் வந்திருக்கிறது.. இயக்கம் செய்தவரிடம் திறமை இல்லாததால், இவரிடமிருந்து சரியான முறையில் நடிப்பை வெளிவர வைக்க முடியவில்லை என்றே நினைக்கிறேன்..!

42 வயசானதால் ஷோபனா அம்மா கேரக்டருக்கு பிரமோஷன் வாங்கியிருக்கிறார். இவரும் நடனம் தெரிந்தவர் என்பதால்தான் கேரக்டருக்கு செலக்ட் செய்தார்களாம்.. ஆனால் நடனம்தான் இல்லை..! இவருடைய பேவரிட்டான கண்களைக்கூட சரியாகப் பயன்படுத்தத் தெரியாத இந்த இயக்குநரை என்னவென்று சொல்ல.. வேஸ்ட்டாகிவிட்டது..!

இசையமைத்திருப்பவர் தரண்.. என்னால் நம்பவே முடியவில்லை. பாடல்களை வெளியிட்ட சோனி நிறுவனம் இரண்டாம் கட்டமாக மீண்டும் ஆர்டர் கொடுத்திருக்கிறதாம்..! அவ்வளவு டிமாண்டா..? அல்லது விளம்பரமா..? பல்லே சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு லவ் பண்ணலாமா? வேண்டாமா? என்ற வார்த்தையை மாத்தி மாத்திப் போட்டு பாடிக் கொல்லும் சிம்புவை நான் மன்னிக்கவே மாட்டேன்.. முடியலை.. ஆனா இந்தப் பாட்டு யூ டியூப்ல ரொம்பவே சக்ஸஸ்..!

விக்னேஷ் சிவன் என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். கல்யாணத்திற்காக தனது லட்சியத்தை இழக்க வேண்டுமா என்கிற ஒரு பெண்ணின் கதையாக சொல்ல வந்தவர், இடையில் கதாநாயகன் சிம்பு நுழைந்ததால், கதையைக் கோட்டைவிட்டுவிட்டு, திரைக்கதையையும் அநியாயத்திற்கு போண்டியாக்கிவிட்டார்..!

மீண்டும் மீண்டும் சிம்புவே வந்து வந்து பேசிக் கொண்டிருப்பதால் ஒரு அளவுக்கு மேல் ரசிக்க முடியவில்லை.. போதும்டா.. ஆளை விடுங்கடா என்று சொல்லும் அளவுக்கு சிம்பு மேல் வெறுப்பை கொண்டு வந்திருக்கிறார்கள்..! இது சிம்புவே வரவழைத்ததா என்றும் தெரியவில்லை..! சிம்புவின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் இது போன்ற ஒருவனின் கதை இது என்று சொல்லாமல், அவரே அப்படித்தான் என்பதாகவே கதை கொண்டு செல்லப்பட்டிருப்பதால் இடைவேளைக்கு பின்பு கதை எங்கே போகிறது என்றே தெரியவில்லை..!? கிளைமாக்ஸும் இன்னமும் கதை இருக்கிறது என்பது போல் முடித்திருக்க.. ஆளை விட்டால் போதும் என்ற மனப்பிராந்தியம்தான் ஏற்பட்டது..!

இப்படியெல்லாம் நாட்டின் சிச்சுவேஷன் தெரியாமல், ஹீரோத்தனத்தை உயர்த்துவதற்காகவே படமெடுப்பது தயாரிப்பாளரை பாழும் கிணற்றில் தள்ளுவதற்குச் சமம். இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள், வாரி, வாரி வழங்கியிருக்கிறார்கள் என்பதை படத்தின் ரிச்னெஸே சொல்கிறது..! பாடல் காட்சிகளுக்கு செட்டிங்க்ஸையே டி.ஆர். படம் போல செய்திருக்கிறார்கள்..! ஏதோ போட்ட முதலீடாச்சும் இந்தத் தயாரிப்பாளருக்கு கிடைக்க வேண்டும் என்று என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!நடிப்பு : சிம்பு, வரலட்சுமி, ஷோபனா, விடிவி கணேஷ்
இசை : தரன் குமார்
ஒளிப்பதிவு : டங்கன் டெல்போர்டு
தயாரிப்பு : ஹிதேஷ் ஜபக்
இயக்கம் : விக்னேஷ் சிவன்

ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் அஜீத்-முருகதாஸ் மீண்டும்

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் அஜீத் குமாரை மீண்டும் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய முதல் படத்தின் ஹீரோ அஜீத் குமார். அதன் பிறகு அவர்கள் ஒன்று சேரவேயில்லை. இந்நிலையில் அஜீத்தை வைத்து படம் எடுக்க ஆசையாக இருப்பதாகவும், அவருக்காக ஸ்கிரிப்ட் கூட தயாரித்துவிட்டதாகவும் முருகதாஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் அஜீத் கூறினால் கையில் உள்ள படத்தை விட்டுவிட்டு வரத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அஜீத்தை முருகதாஸ் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.
அஜீத் குமார் தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு சிவா இயக்கத்தில் நடிக்கிறார். முருகதாஸ் தமிழில் ஹிட்டான துப்பாக்கியை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பெண்களின் ஜி ஸ்பாட்....?இன்பம் அனுபவிக்க முடியும் !


 
ஆர்கஸம் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக பலரும் என்னென்னவோ செய்கின்றனர். சத்தான உணவு, கிளர்ச்சியான பேச்சு, செயல்பாடுகள் இருந்த போதிலும் ஆர்கஸம் சரியில்லை என்று அலுத்துக்கொள்கின்றனர் பெண்கள். இதுபோன்றவர்களை குறிவைத்து ஜி ஷாட் என்ற ஊசி சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது பெண்களின் ஜி ஸ்பாட்டை பெரிதாக்கி ஆர்கஸத்தை அதிகரிக்குமாம்.
செக்ஸ் உலகில் ஜி ஸ்பாட் என்ற வார்த்தையைப் பிரயோகிக்காத வாயே இல்லை இன்று. அது உண்மையா கற்பனையா என்று கூட இதுவரை யாராலும் தெளிவாக வரையறுக்க முடியவில்லை இருந்தாலும், இதுதான், இதேதான் என்று ஒரு ஏரியாவை மனதில் நினைத்து அனைவரும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள்.
அந்த ஜி ஸ்பாட்டில் ஜி ஷாட் எனப்படும் ஊசியைப் போட்டுக்கொண்டால் ஒரு பழைய பத்து பைசா நாணயம் அளவுக்கு தற்காலிகமாக பெரிதாகி விடுகிறதாம். இதன் மூலம் கூடுதல் இன்பம் அனுபவிக்க முடியுமாம். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த ஜி ஷாட் ஊசி பற்றிதான் பரபரப்பாக பேசப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இதுவரை 2000க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஊசியைப் போட்டுக் கொண்டுள்ளனராம்.
இந்த ஊசியின் விலையானது 800 பவுண்டுகள்தான். அரை மணி நேரத்தில் ஊசி போடும் வேலை முடிவதால் பெண்களிடையே இதற்கு ஏக டிமாண்ட். ஊசி போட்ட பின்னர் பெண்களின் உறுப்புப் பகுதியில் உள்ள ஜி ஸ்பாட்டானது விரிவடைந்து கூடுதல் இன்பத்திற்கு வழி வகுக்கிறதாம். இதைக் கேள்விப்பட்ட லாஸ் ஏஞ்சலெஸ் பெண்கள் இந்த ஊசியைப் போட அலை மோத ஆரம்பித்துள்ளனராம்.
இது பற்றி கருத்து கூறியுள்ள மகப்பேறு மருத்துவரும், அறுவைசிகிச்சை நிபுணருமான டேவிட் மெட்டலாக், இந்த ஜீ ஷாட் ஊசியை போட்டுக்கொள்வதன் மூலம் பெண்கள் முன்பை விட உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் ஊசி போடும் மருத்துவமனையில் வாரா வாரம் ஒரு விளக்க வகுப்பையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஊசி அறிமுகமாகி விட்டாலும் கூட சமீப காலமாகத்தான் இதற்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம். இந்த ஊசியைப் போட்ட பல பெண்களும், தங்களது செக்ஸ் வாழ்க்கை முன்பை விட படு உற்சாகமாக இருப்பதாக கூறியுள்ளனர்

கொஞ்சம் கூட திருப்தி இல்லையே? புலம்பும் பெண்கள்!

       
பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் கணவருடனான செக்ஸ் உறவில் திருப்தி ஏற்படவில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பு ஒன்றில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட திருமணமான பெண்கள் கணவருடன் செக்ஸ் உறவு திருப்தியில்லாமல் இருப்பதாக கூறியுள்ளனர். வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் மூன்றில் இரண்டுபேர் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியில்லாமல் இருக்கின்றனர். தென்கிழக்குப் பகுதியைச் சேர்ந்த பிரிட்டன் மக்கள் தங்கள் துணையுடனான செக்ஸ் உறவில் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தெற்கு மிட்லேண்ட் பகுதியைச் சேர்ந்த மக்கள் செக்ஸ் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் பிரிட்டனைச் சேர்ந்த 70 சதவிகிதம் ஆண்கள் தங்களின் செக்ஸ் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தொலைத்து நிற்கின்றனர். வெளித்தோற்றத்திற்கு பகட்டாக உடையணிந்து திரிந்தாலும் பெரும்பாலான தம்பதிகள் உள்ளூர மகிழ்ச்சியின்றி இருப்பதற்குக் காரணம் அவர்களின் திருப்தியற்ற செக்ஸ் வாழ்க்கைதான் என்கிறது இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட இல்லிசிட் என்கவுண்டர்ஸ் டாட் காம் என்ற இணையதளம்.
இது மிகவும் ஆபத்தான விசயம் என்று கூறியுள்ள ஆய்வாளர்கள் குடும்ப வாழ்க்கையை சிதைத்துவிடும் அபாயம் உள்ளது என்கின்றனர்

வெள்ளி, 23 நவம்பர், 2012

அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்னிலையில் "கேட்ஸ் சூப்பர் சிங்கர் 2012"

 
அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் நவம்பர் 10ம் தேதிதீபாவளிபண்டிகை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக "கேட்ஸ் சூப்பர் சிங்கர் 2012" இறுதிப் போட்டி ஆயிரக்கணக்கானஅமெரிக்கவாழ் தமிழர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதில்பிரபலத்திரைப்படப்பின்னணிப் பாடகர்களானமஹதி, ஹரீஷ் ராகவேந்திரா, விஜய் டிவி புகழ் சத்ய பிரகாஷ் மூவரும் நடுவர்களாகக்கலந்துகொண்டு, போட்டிகளில் சிறப்பாகப் பாடியவர்களைத் தேர்வு செய்து "கேட்ஸ் சூப்பர் சிங்கர் 2012" பட்டங்களை வழங்கி சிறப்பித்தனர்.
பின்னர், சஹானா ட்ரீம்ஸ் குழுவினருடன் இணைந்து மஹதி, ஹரீஷ் ராகவேந்திரா, சத்ய பிரகாஷ் தங்களின் இனிய குரலால் நள்ளிரவு வரை தொடர்ந்து வழங்கிய இசை மழையை மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் ரசித்து மகிழ்ந்தனர்

வியாழன், 22 நவம்பர், 2012

எனக்கும் விஷாலுக்கும் என்ன உறவு? வரலட்சுமி சரத்குமார் பதில்.


போடா போடிÕ பட ஹீரோயின் வரலட்சுமி. அவர் கூறியதாவது: போடா போடி படத்தில் எனது நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். இவ்வளவுநாள் காத்திருந்து நடித்ததற்கு பொருத்தமான வேடம் என்றனர். எனது தந்தை சரத்குமாரும் என் நடிப்பை பாராட்டினார். சினிமாவில் எனது திறமையை மட்டுமே நம்பி இருக்கிறேன். என் அறிவு என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்கிறேன்.
நடனம் எனக்கு பிடிக்கும். சிறுவயது முதல் எல்லாவகை நடனமும் கற்றிருக்கிறேன். மேனேஜ்மென்ட் படிப்பில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்கிறேன். நடிப்பை பொறுத்தவரை இந்தி நடிகர் அனுபம் கெர் நடிப்பு பள்ளியில் படித்தேன்.
‘எனக்கும் விஷாலுக்கும் என்ன உறவு? என்று கேட்கிறார்கள்.எங்கள் இருவர் குடும்பத்துக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் உண்டு. எனது தந்தை சரத்குமார், விஷால் தந்தை தயாரித்த படங்களில் நடித்தது முதல் இந்த நட்பு தொடர்கிறது. அப்போதே விஷாலை எனக்கு தெரியும். அவர் எனது நெருங்கிய நண்பர். என்னுடைய தொழில் முறையில் எனது வழிகாட்டி. எங்களுக்குள் இருக்கும் உறவு இதுதான். இதை மீறி வேறு எந்த உறவும் இல்லை.
‘மத கத ராஜா படத்தில் எனக்கு வாய்ப்பு பெற்றுத்தந்தது விஷாலா? என்கிறார்கள். ஹீரோயின் தேர்வு விஷயத்தில் அவர் தலையிடுவதில்லை. இயக்குனர் சுந்தர்.சிதான் என்னை தேர்வு செய்தார். திருமணம் பற்றி கேட்கிறார்கள். இப்போதுதான் நடிக்க வந்திருக்கிறேன். நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு வரலட்சுமி கூறினார்.

நீது சந்திராவை சிகரெட்டுக்கு அடிமையாக்கிய இயக்குனர் அமீர்.

 

கன்னித்தீவு பொண்ணா கட்டழகு கண்ணா..." பாட்டுக்கு அமீருடன் ஆடியவர் நீது சந்திரா. அந்த அறிமுகத்தில் இருவரும் நெருக்கமாக ஆதிபகவன் படத்தில் நீது சந்திராவை ஹீரோயின் ஆக்கிவிட்டார் அமீர்.
பக்கா கமர்ஷியல் படத்தில் அல்ட்ரா மார்டன் பெண்ணாக நடித்திருக்கிறார் நீது. அதாவது கையில் எப்போதும் சிகரெட்டும் கையுமாக இருக்கிற கேரக்டர். சிகரெட் பழக்கம் இல்லாத நீது சந்திரா படப்பிடிப்பின் போது காட்சிக்காக ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் வரை சிகரெட் புகைக்க வேண்டியது இருந்ததாம்.
இதுதவிர சிகரெட்டை ஸ்டைலாக பிடித்து பழக படப்பிடிப்பு இல்லாத நேரத்திலும் பாக்கெட் கணக்கில் ஊதித் தள்ளியிருக்கிறார். விளைவு நீது இப்போது நிஜமாகவே பிடிக்க ஆரம்பித்து விட்டார். ஒரு நாளைக்கு பத்து சிகரெட் வரைக்கும் ஊதுகிறாராம். "இப்பெல்லாம் சிகரெட் பிடிச்சாத்தான் சுறுசுறுப்பா

ஆபாச படங்களை பார்ப்பதால் !

         
 


பிரிட்டன்ஆண்கள்அதிக அளவில் ஆபாச படங்களை பார்ப்பதால், அவர்களுக்கு மன அழுத்தம்ஏற்பட்டு,பணி யிடங்கள்,கணவன்-மனைவி உறவுஉள்ளிட்டவற்றில் பிரச்னைகள்ஏற்படுவதாக ஆய்வுஒன்றில் தெரியவந்துள்ளது.இணையதளங்களில் மட்டுமல்லாமல், ஐ பாட், மொபைல்போன், பத்திரிகைகள், "டிவி' "டிவிடி' உள்ளிட்ட வடிவங்களில் ஆபாசப்படங்களை மிக எளிதாக பார்க்கும் சூழல் தற்போது நிலவுகிறது.இதனால், பல்வேறு நாடுகளில் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


அண்மையில், பிரிட்டனில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் குறித்து, ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், 18 முதல் 24 வயதுக்குட்பட்ட பிரிட்டன் இளைஞர்களில் நான்கில் ஒரு பங்கு இளைஞர்கள் ஆபாசப்படம் பார்க்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.இதனால் அதிக நேரம் தொடர்ந்து ஆபாசப்படம் பார்ப்பதால், மன அழுத்தம் ஏற்பட்டு வேலையில் கவனமின்மை, உறவுகள், தாம்பத்ய வாழ்க்கை போன்றவற்றில் பிரச்னை எழுவது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:ஆபாசப்படம் பார்க்கும் இளைஞர்களில் மூன்றில் ஒரு பங்கினர், வாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக படங்களை பார்க்கின்றனர். நான்கு சதவீதம் பேர் வாரத்திற்கு 10 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆபாசப்படங்களை பார்க்கின்றனர்.இத்தகைய இளைஞர்கள் தான் அதிக அளவில் மன அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகின்றனர். அவர்கள் உடனடியாக மருத்துவர்களை சந்திப்பது நல்லது.ஆண்கள் சராசரியாக வாரத்திற்கு 2 மணி நேரமும், பெண்கள் 15 நிமிடங்களும் ஆபாசப்படங்கள் பார்க்கின்றனர்.
ஆயிரத்து 57 பேரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, 80 சதவீதம் பேர் "எக்ஸ்' தர சான்றிதழ் வழங்கப்பட்ட ஆபாசப்படங்களை விரும்பிப் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இதில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இத்தகைய படங்கள் பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது

ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கு ?


தனிமையிலே இனிமை காண முடியுமா என்பது தெளிவான பதிலே தெரியாத ஒரு பழம் பெரும் கேள்வி. பலருக்கு தனிமைதான் இனிமை, சிலருக்கோ தனிமை பெரிய எதிரி.
ஆனால் அமெரிக்காவில் நடந்த இந்த ஆய்விலோ சுடு நீரில் குளித்தால் சுகமாகும் என்ற புதிய முடிவைத் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஃபீலிங்ஸ் போல!.
அய்யய்யோ தனிமையா என்று அலறுவோருக்கு ஆறுதல் கூறும் வகையில் வந்துள்ளது ஒரு ஆய்வு முடிவு. அப்படிப்பட்டவர்கள் சூடான குளியல் போட்டால் தனிமை தரும் வேதனைகள், விரக்திகள், வெறுப்பு, புழுக்கம் போய் விடும் என்கிறது அந்த ஆய்வு முடிவு.
குறிப்பாக பெண் துணை இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு விரக்தியும், ஒரு வித புழுக்கமும் அதிகம் இருக்கும். அதேபோன்ற நிலைதான் ஆண் துணை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் இருக்குமாம். இப்படிப்பட்டவர்களுக்கு சூடான குளியல் சுகானுபவமாக இருக்குமாம். மேலும் அவர்களை விட்டு வேதனைகள் அகல இது நல்ல உபாயமாகும் என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்
இதுதொடர்பாக 18 வயது முதல் 65 வயது வரையிலானவர்களைக் கொண்டு ஒரு ஆய்வை நடத்தினர். அதில், சூடான குளியலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமையின் வேதனை பெரிதாக தெரியவில்லையாம். மாறாக புத்துணர்ச்சியுடன் அவர்கள் காணப்பட்டனராம். அதேசமயம், சூடான குளியலைப் போடாதவர்கள் எதையோ பறி கொடுத்தவர்களாக காணப்பட்டனராம்
சூடான குளியல் மூலம் மன ரீதியாக தனிமை உணர்வு மட்டுப்படுவதாக ஆய்வை மேற்கண்டவர்கள் தெரிவிக்கிறார்கள்
இந்த ஆய்வு முடிவு நமது ஊரில் காலம் காலமாக நிலவும் பழக்கத்திற்கு நேர் மாறனதாக இருப்பது குறிப்பிடத்தக்கு. நமது ஊர்களிலெல்லாம் செக்ஸ் உணர்வுகளால் தூண்டப்படும், தனிமையில் தவிக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் அதைத் தணிக்க முடியும் என்ற பொதுவான நம்பிக்கையும், பழக்கமும் இருந்து வருகிறது

புதன், 21 நவம்பர், 2012

ஐயா படத்தில் இருந்து மேக்கப் மேனாக இருந்த ராஜுவை திடீரென நீக்கிய நயன்தாரா.

 
சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என பலரோடும் கிசுகிசுக்கப்பட்டவர் நயன்தாரா. யாராயிருந்தாலும் இவரது நெருங்கிய நட்பு சுமார் ஒரு வருடம் தான்.

இந்த நட்பு வட்டத்தில், நயன் தமிழில் அறிமுகமான 'ஐயா' படத்தில் இருந்து நயன்தாராவிற்கு மேக்கப் மேனாக இருந்து வரும் ராஜுவும் உண்டு. நயன் எந்த ஒரு படத்தில் நடித்தாலும், பல்வேறு நாயகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டாலும் ராஜு தான் மேக்கப் மேனாக இருந்து வந்தார்.

மேக்கப் மேன் ராஜு உடன் சென்று தான் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து புயல் நிவாரண நிதி கொடுத்தார். பிரபுதேவா - நயன் பிரிவுக்கு முக்கிய காரணம் ராஜு தான் என்று பேசப்பட்டது.

ஆனால் தற்போது நிலைமை இப்போது தலைகீழ். ராஜுவை வேலையை விட்டு நீக்கிவிட்டாராம் நயன். என்ன காரணம் என்பது தெரியவில்லை

தமிழா? தெலுங்கா? குழப்பத்தில் அனுஷ்கா

அறிமுகமானாலும், 'அருந்ததீ' டப்பிங் படத்தின் மூலம் தமிழ் திரையுலகை அதிரவைத்தார் அனுஷ்கா. இருந்தாலும், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துவதை குறைத்துவிட்டு வேட்டைக்காரன், தெய்வத்திருமகள், தாண்டவம் என வரிசையாக தமிழ் திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இடத்தினை பிடித்த அனுஷ்காவிற்கு பழைய மாதிரி தெலுங்கு பட வாய்ப்புகள் வருவது இல்லையாம். தனது நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று மிகவும் வருத்தப்படுகிறாராம்.


தெலுங்கு மார்கெட்டை பிடிக்க அங்கு படங்களை ஒப்புக் கொள்ளலாம் என்றால், கோலிவுட்டில் கோலோச்ச ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா என இவரது இடத்தினை பிடித்துவிட மும்முனை போட்டி நடத்தி வருகிறார்கள். தமிழில் அனுஷ்கா நடிப்பில் வெளியான படங்கள் யாவுமே இவருக்கு பெரிதாக பெயர் வாங்கி தரவில்லை என்பதால் எந்தப் பக்கம் போவது என குழம்பியிருக்கிறாராம் அனுஷ்.

தற்போது தெலுங்கில் நாகார்ஜுன் உடன் நடித்து இருக்கும் DAMURUKAM படத்தினை நம்பி இருக்கிறார் அனுஷ்கா. அப்படத்தினை தொடர்ந்து, தெலுங்கிலாவது விட்ட இடத்தினை பிடித்து விட வேண்டும் என்று களத்தில் இறங்க தயாராகி வருகிறாராம்.

"தமிழில் 'இரண்டாம் உலகம்' படம் மட்டும் வரட்டும் அப்புறம் பாருங்கள் எனக்கு வரும் வாய்ப்பை.." என்று தனது நண்பர்களிடம் கூறி வருகிறாராம் அனுஷ்கா

தாம்பத்ய உறவின் மூலம் உடலுக்கு மட்டும் சந்தோஷம் கிடைப்பதில்லை?

          
மனதும்உற்சாகமடைகிறது.மூளையும் புத்துணர்ச்சியடைகிறது என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். தினசரி உறவில் ஈடுபடுவதன் மூலம்உண்டாகும் நன்மைகளையும், பலன்களையும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
பாசப்பிணைப்பு அரிகரிக்கும்
தினசரி செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம் இருவருக்கும் இடையே உடல் ரீதியான பாசப் பிணைப்புஅதிகரிக்கிறது.உடலும் ஆரோக்கியமாக திகழ வழி கிடைக்கிறது என்று கூறுகிறார்கொலம்பியாபல்கலைக்கழக மகப்பேறியல்துறைபேராசிரியர்டாக்டர் ஹில்டா ஹட்சர்சன்
பிரச்சினையை சமாளிக்கலாம்
மேற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உறவில் ஈடுபடுவோருக்கு மன அழுத்தம் போன்ற சூழல்களை எளிதாக சமாளிக்க முடிகிறது என்று தெரியவந்துள்ளது.
உற்சாகம் தரும் ஹார்மோன்கள்
செக்ஸ் உறவின்போது வெளியாகும் என்டார்பின் மற்றும் ஆக்ஸிடாசின் ஹார்மோன்கள், நமது மூளையின் மகிழ்ச்சிப் பிரதேசத்தைத் தூண்டி விட்டு நம்மை உற்சாகத்தில் வைத்திருக்க உதவுகிறது. மேலும், ரொமான்டிக் மூடையும் இது தூண்டி விடுகிறது. மனதையும், உடலையும் ரிலாக்ஸ் ஆக்குகிறது. இதனால் பதட்டம், மன அழுத்தம், கோபம் போன்றவை சர்ரென்று குறைந்து போய் விடுகிறது.
நல்லா தூக்கம் வரும்
உடலுறவின்போது கிளைமேக்ஸை எட்டினால்தான் இந்த சந்தோஷம் கிடைக்கும் என்று இல்லை. மாறாக ஆர்கசம் வந்தால் கூட போதுமானாதாம்.
அதிக அளவில் உற்சாகமான உறவில் ஈடுபடும் நாட்களில் நன்றாக உறக்கம் வருமாம். இதற்கு காரணம் ஆர்கஸத்தின்போது வெளியாகும் புரோலடாசின் என்ற ஹார்மோன்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த ஹார்மோனுக்கும் உறக்கத்திற்கும் நிறைய தொடர்பு இருக்கிறதாம்.
பிணைப்பு அதிகமாகும்
நாம் தூங்கும்போது புரோலடாசின் ஹார்மோன் அளவானது இயல்பாகவே அதிகம் இருக்குமாம். இதுதான் மனிதர்களின் தூக்கத்திற்கும் முக்கியக் காரணம். இது உறவு கொள்ளும் ஆண், பெண்ணுக்கும் இணையிலான பிணைப்புக்கும் முக்கியக் காரணமாகிறதாம்.
இருப்பினும் அருமையான, திருப்திகரமான உடலுறவை வைத்துக் கொள்ளும்போது தூக்கம் அவ்வளவு சீக்கிரம் வராதாம். மாறாக உடலுக்கு நல்ல சக்தி கிடைக்குமாம். ஒரு வேளை தூக்கம் வேண்டும் என்று விரும்பினால் சாதாரண முறையிலான செக்ஸ் உறவு கொண்டாலே போதுமானதாம்.
புத்துணர்ச்சி கிடைக்கும்
அதேபோல செக்ஸ் வைத்துக் கொள்வோருக்கு உடல் வலி, அசதி போன்றவையும் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்குமாம். ஆர்கஸத்திற்குப் பின்னர் வெளியாகும் ஹார்மோன்களின் அளவுதான் இதற்குக் காராணம். முதுகு வலி, தலைவலி போன்றவை நல்ல செக்ஸ் உறவுக்குப் பின்னர் காணாமல் போய் விடுமாம்.
தலைவலியை குறைக்கும்
மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி உள்ள பெண்கள் பலரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்போது, அவர்களுக்கு கிளைமேக்ஸ் வந்த பின்னர் அந்தத் தலைவலி குறைந்து அல்லது மறைந்து போனது தெரியவந்தது. இதற்குக் காரணம். ஆர்கஸத்தின்போது உருவாகும் என்டோப்ரீன்கள் என்ற ஹார்மோன்தான் உடல் வலியைப் போக்கும் அருமருந்தாக அமைந்துள்ளதாம்.
சளியாவது காய்ச்சலாவது.....
செக்ஸ் உறவால் சளி பிரச்சினையையும் கூட விரட்டியடிக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். செக்ஸ் உறவின்போது நமது உடலில் உற்பத்தியாகும் இம்யூனோகுளோபுலின் ஏ என்ற ஆன்டிபயாடிக்தான் இதற்குக் காரணம். இந்த ஆன்டிபயாடிக் காரணமாக நமது உடலை சளித் தொல்லை, காய்ச்சல் போன்றவை தாக்குவது குறைகிறதாம்
 

செவ்வாய், 20 நவம்பர், 2012

ஒருவார வசூல் 50 கோடி! : இன்ப அதிர்ச்சியில் ‘துப்பாக்கி’ டீம்

விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தின் வசூல் ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாயைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இளையதளபதி விஜய், காஜல் அகர்வால் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் தீபாவளிக்கு ரிலீஸான ‘துப்பாக்கி’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த 13-ஆம் தேதி ரிலீஸான இந்தப் படம் முதல் மூன்று நாட்களில் சுமார் 10 கோடிக்கும் மேல் பணத்தை கத்தை கத்தையாக வசூல் செய்தது. அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
அதற்குள் அதன் வசூல் இன்னும் அதிகரித்து ஆறே நாட்களில் 45.60 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறதாம். ஆக அதன் ஒருவார வசூல் மட்டும் சுமார் 50 கோடியைத் தாண்டும் என்றும் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ல தியேட்டர்களில் மட்டுமே இந்த அளவுக்கு பெரிய தொகை வசூலாகியிருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள சுமார் 1000 தியேட்டர்களில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படத்தின் வசூல் சுமார் 100 கோடியைத் தாண்டும் என்று தியேட்டர் வட்டாரங்களில் சொல்லப்படுவதால் அதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உட்பட படத்தின் டோட்டல் டீமும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறதாம்

துப்பாக்கி படத்துக்கு யு சர்ட்ஃபிகேட் : 1000 தியேட்டர்களில் பிரம்மாண்ட ரிலீஸ்

இளையதளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் முதல் முறையாக இணைந்திருக்கும் ‘துப்பாக்கி’ படத்துக்கு ‘யு’ சென்சார் சர்டிஃபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உண்டு பண்ணியிருக்கும் ‘துப்பாக்கி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக, காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷன் என பாப்புலர் டீம் இந்தப் படத்தில் களம் இறங்கியிருக்கிறது.
ஒரு ராணுவ வீரனை பற்றி சொல்லும் படமாக தயாராகியுள்ள இந்தப்படத்தில் எல்லையில் இருந்து ஊருக்கு திரும்பும் ராணுவ வீரன், உள்ளூர் தீவிரவாதத்தை அழிக்க போராடுவதே கதையாம். மேலும் இந்தப்படத்தில் மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்களை மையப்படுத்தியும் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக மும்பையிம் சுமார் 50 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
வருகிற 9-ஆம் தேதி தீபாவளி ரிலீஸாக இருக்கும் இந்தப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் போர்டு மெம்பர்கள் படத்துக்கு ‘யு’ சர்டிஃபிகேட் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இந்தப்படத்தை உலகம் முழுவதும் உள்ள சுமார் 1000 தியேட்டர்களில் மிகப்பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்

கன்னட நாயகி யாமி கெளதத்துக்கு குவியும் பட வாய்ப்புகள்

 



மாடலிங் துறையில் கலக்கி விட்டு, திரைக்கு வந்த யாமி கவுதம், முதலில் கன்னட படத்தில் தான் அறிமுகமானார். இதற்கு பின், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தார். இந்தியில், “விக்கி டோனர் என்ற ஒரே படத்தில் தான் நடித்தார். இதற்கு பின்,சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும், தென் மாநில திரைப்பட தயாரிப்பாளர்கள், கால்ஷீட்டுக்காக, யாமி கவுதமின் வீட்டை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர். தமிழில், “கவுரவம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் யாமி, அடுத்ததாக, “தமிழ்ச் செல்வனும், தனியார் அஞ்சலும் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தை, கவுதம் மேனன் தயாரிக்கிறார். தெலுங்கில்,”கொரியர் பாய் கல்யாண் என்ற படத்திலும், யாமி நடிக்கிறார். குடும்ப பாங்கான கேரக்டர்களுக்கும், மாடர்ன் கேரக்டர்களுக்கும் பொருந்தக் கூடிய முக லட்சணம், யாமியிடம் இருப்பதால் தான், அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன என்கின்றன, கோலிவுட் வட்டாரங்கள்

திங்கள், 19 நவம்பர், 2012

முற்றிலும் கவர்ச்சிக்கு மாறிய ஸ்ரேயா

கொலிவுட்டில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என்று பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஸ்ரேயா.
இதுவரை கவர்ச்சி, குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வந்த ஸ்ரேயா, தற்போது முற்றிலும் கவர்ச்சிக்கு தாவியுள்ளார்.
தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் ‘சந்திரா’ என்ற படத்தில் துணிச்சலாக ஆடைகுறைப்பு செய்துள்ளார்.
சரித்திர கதையம்த்துடன் தயாராகும் இப்படத்தில் ஸ்ரேயா மகாராணி வேடத்தில் வருகிறார்.
பாடல் காட்சிகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடித்துள்ளார். துணை நடிகர், நடிகைகளை வெளியேற்றி இந்த கவர்ச்சி சீன்களை படமாக்கியுள்ளனர்.
அரசகுல வழித்தோன்றலாக இன்றைய காலகட்டத்தில் வாழும் ராணி நாகரீகத்தோடு ஒன்ற தவிக்கும் மனப்போராட்டமே கதை.
அதிக செலவில் அரண்மனை அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.
விமானத்திலும் பாடல் காட்சிகள் படமாகி உள்ளது. இப்படத்தை ரூபா அய்யர் இயக்கியுள்ளார்.
பிரேம் நாயகனாக நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராமன், விவேக், சுகன்யா விஜயகுமார் போன்றோரும் நடித்துள்ளனர். பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கடலில் குத்தாட்டம் போட்ட லட்சுமி மஞ்சு

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக உள்ளவர் லட்சுமி மஞ்சு.
நடிகையாக இருந்த போதிலும் டாப்சீ மற்றும் ஆதி நடிக்க மறந்தேன் மன்னித்தேன் என்ற படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இது தவிர மணிரத்னம் இயக்கும் கடல் படத்திலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ராதாவின் மகள் துளசி மற்றும் கார்த்திக்கின் மகன் கெளதம் நடிப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது கடல் படம்.
பெயருக்கு ஏற்ப கடலை நம்பி வாழ்க்கை நடத்துபவர்களின் கதையை தான் படமாக்கி இருக்கின்றனர்.
இப்படத்தில் லட்சுமி மஞ்சு, அரவிந்த் சாமி ஜோடியாக நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் குத்தாட்டமும் ஆடி இருக்கிறாராம்.
இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் நெஞ்சுக்குள்ளே என்ற பாடல் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் வெடிக்க தயாராகும் துப்பாக்கி

கொலிவுட்டில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடித்து வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் துப்பாக்கி.
தீபாவளியன்று வெளியிடப்பட்ட இப்படம் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
ஏற்கனவே துப்பாக்கி படத்தை இந்தியில் ரீமேக் செய்யபோகிறேன் என்று படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கூறியிருந்தார்.
தற்போது அதற்கான நேரம் வந்து விட்டது. அக்ஷய் குமார் தான் இந்தியில் நடிக்க போகிறார் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
தற்போது ரசிகர்களுக்கு சூடான செய்தி என்னவென்றால் அக்ஷய் குமார் ஏ.ஆர் முருகதாசிடம் உடனடியாக அப்படத்தை இயக்க கூறியுள்ளாராம்.
அக்ஷய் குமாருக்கு ஜோடியாக பரிணீத சோப்ரா அல்லது கத்ரினா கைப் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியில் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது. இப்படத்தை விப்புள் ஷா தயாரிக்க உள்ளார்.
மேலும், துப்பாக்கி தமிழ்நாட்டில் வெளியான மூன்றே நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கொலிவுட்டில் வசுந்தரா தாஸ்

நடிகை வசுந்தரா தாஸ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி, தொடர்ந்து கமல் நடித்த ஹேராம் படத்தில் நாயகியாக நடித்தார்.
பின்னர் அஜீத் குமாருக்கு ஜோடியாக சிட்டிசன் படத்தில் நடித்து கலக்கினார்.
கொலிவுட்டில் குஷ்புக்கு நிகராக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டார்.
இத்துடன் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தாலும் வழக்கம் போல, இந்தியில் நடிக்க ஆர்வத்துடன் கிளம்பினார்.
பாலிவுட்டில் மான்சூன் வெட்டிங்கில் நடித்தார். ஆனால் திடீரென காணாமல் போனார்.
பெங்களூரை விட்டு மும்பைக்கே நிரந்தரமாகக் குடியேறிய வசுந்தரா, ஒரு மியூசிக்கில் பேண்டில் பாடிக் கொண்டிருந்தார்.
குரல் பாதிக்கப்பட்டதால் பாடுவதும் நின்றுபோனபோது 4, 5 ஆண்டுகள் கழித்து பின் நதிகள் நனைவதில்லை என்ற படம் மூலம் மீண்டும் பாடகியாகியுள்ளார்.
இந்தப் படத்துக்கு இசை சௌந்தர்யன், கதை, வசனம் எழுதி நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்குகிறார்

நெருக்கமான ராணா- நயன்தாரா: எரிச்சலில் பிரபுதேவா


கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும் என்ற படத்தை விளம்பரப்படுத்துவதற்காக ராணா- நயன்தாரா ஜோடி மும்பைக்கு வரவிருக்கிறார்களாம்.
ராணா, நயன்தாரா சேர்ந்து நடித்துள்ள தெலுங்கு படம் கிருஷ்ணம் வந்தே ஜெகத்குரும்.
நயன்தாரா படுகவர்ச்சியாக நடித்துள்ள இந்த படத்தை விளம்பரப்படுத்த நாயகி, நாயகன் இருவரும் இணைந்து பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்கிறார்களாம்.
மேலும் இப்படத்தை இந்தியில் டப் செது வெளியிடும் திட்டமும் உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ராணாவும், நயனும் நல்ல நண்பர்களாகி விட்டனராம். ஆனால் அவர்கள் டேட் செய்வதாகவும் பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில் அவர்கள் மும்பை வரும்போது அங்கிருந்து கிளம்பி வேறு எங்காவது செல்லத் திட்டமிட்டுள்ளாராம் பிரபுதேவா.
நயன்தாராவைப் பிரிந்த பிறகு பிரபுதேவா மும்பையில் தங்கி இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நேரத்தில் முன்னாள் காதலியை சந்திப்பது நன்றாக இருக்காது என்று நினைக்கிறாராம்.

ஞாயிறு, 18 நவம்பர், 2012

அம்மாவின் கைப்பேசி {காணொளி,}

By.Rajah.துப்பாக்கி, போடா போடி என்ற பொழுதுபோக்கு சரவெடிகளின் சப்தங்களுக்கு மத்தியில் தங்கர் பச்சானின் அம்மாவின் கைப்பேசி காணாமல் போய்விட்டது.
இருப்பினும் இயக்குனர் தங்கர் பச்சானின் அரிய படைப்பு என்று நினைத்துக்கொண்டு அம்மாவின் கைபேசி தியேட்டர் வாசலை மிதிக்கும் ரசிகர் பெருமக்களுக்கு பேராபத்து இருக்கிறது.
ஒன்பது பிள்ளைகளைப் பெற்றத் தாய் தன் கடைசி மகன் மீது வைத்திருக்கும் அளவுகடந்த பாசத்தை மிகவும் நீளமாகவும் உருக்கமாகவும் சொல்லிருக்கிறார் தங்கர்பச்சான்.
வீட்டின் கடைசி மகன் என்பதால் அம்மாவுக்கு செல்லப்பிள்ளையாகவே வளர்கிறார் அண்ணாமலை என்கிற சாந்தனு.
கொடுக்கப்பட்ட காட்சிகளுக்கு கெட்டிக்காரத்தனமாக நடித்து இந்த படத்தில் நல்ல பெயர் வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைக்குப் போகாமல் ஊர் சுற்றும் ஊதாரித்தனமாக வாலிபராக வலம் வருகிற சாந்தனுவிற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு தொடக்கம் முதலே இருக்கிறது.
அதனால் வீட்டின் மற்ற அண்ணன்களும் அக்காவும் சாந்தனுவை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
இருப்பினும் தன் மாமன் மகளான செல்வி என்கிற இனியாவை காதலிக்கும் சாந்தனு, அவரை திருமணம் முடிக்க வேண்டுமென்பதற்காக பொருப்புள்ள பிள்ளையாக மாறி தன் மாமாவிடமே வேலைக்கு சேர்கிறார்.
இந்த நேரத்தில் வீட்டில் ஒரு விஷேஷம் நடக்க அங்கு தங்க நகை காணாமல் போக, அதை சாந்தனுதான் எடுத்திருப்பார் என்று எல்லோரும் சந்தேகப்பட, சாந்தனுவை அடித்து உதைத்து வீட்டைவிட்டே துரத்திவிடுகிறார் அவர் அம்மா. பல இடங்களில் வேலைக்கு போய் கஷ்டப்படுகிறார்.
இருப்பினும் சில நல்ல முதலாளிகள் அவருக்கு கிடைப்பதால் நன்றாக சம்பாதித்து வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைகிறார்.
அதுவரை வீட்டுக்கு போகாமலும் தன் அம்மாவை பார்க்காமலும் இருந்த சாந்தனு, தன் அம்மவுடன் பேச ஒரு கைபேசி வாங்கி அம்மாவுக்கு அனுப்புகிறார்.
அம்மாவும் மகனும் கைபேசியில் பாசத்தை பரிமாறிக்கொள்கிறார்கள்.
தான் வேலை செய்யும் இடத்தில் உண்மையாக இருப்பதால், எதிரிகளையும் சம்பாதித்து கொள்கிறார் சாந்தனு.
அந்த எதிரிகள் சாந்தனுவை தீர்த்துக்கட்ட துடித்துக் கொண்டிருக்க, இறுதியாக அம்மாவும் மகனும் சந்தித்துக்கொள்கிறாரார்களா என்ற கேள்வியை நோக்கி நகர்கிறது க்ளைமாக்ஸ்.
தன் நாவலை முழுமையாக எடுக்க வேண்டுமென்பதற்காக பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தி படம் முடிகிறவரை புலம்ப வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் தங்கர்பச்சான்.
’அம்மாவின் கைபேசி’ அண்ணாமலையின் கதையாக இல்லாமல் பிரசாத்தின் (தங்கர் பச்சான் கதாப்பாத்திரம்) கதையாக இருப்பது எதிர்பார்க்காத ஏமாற்றம்.
இன்னும் சொல்லப்போனால் அவர் நடித்திருக்கும் அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நீளமான காட்சிகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது.
படத்தில் ஒரே ஒரு அறுதலான விஷயம் தன் வேலையை மிகச்சரியான விதத்தில் செய்திருக்கிறார் சாந்தனு. நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.
அம்மாவின் பாசத்துக்கு அடங்கி நடக்கும்போதும், இனியாவுக்கு நச்சுன்னு ஒரு இச்சு வைக்கும் போதும், எதிரிகளிடம் சிக்கிகொண்ட போதும், ரொம்ப தெளிவான நடிப்பு.
இனியா, கொடுத்த காட்சிகளை சும்மா அல்வா மாதிரி சாப்பிட்டிருக்கிறார். குறைவான காட்சிகள் என்றாலும், நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அம்மாவாக நடித்திருக்கும் ரேவதி கிராமத்துத்தாயை அப்படியே கண்முன் நிறுத்துகிறார். அண்ணாமல... அண்ணாமல... என்று மகனிடம் பேசும் வசன உச்சரிப்பிலும் கூட பாசத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கைபேசியில் பேசும்போதெல்லாம் டவர் கிடைக்காமல் சுவர் மேல் ஏறி நின்று பேசும் வேடிக்கையான காட்சிகள் ரசிக்கவைத்தன.
கொமெடி என்ற பெயரில் தங்கர்பச்சான் செய்த சேஷ்டைகள் மிகவும் கோபப்படுத்துகிறது.
அம்மாவின் பாசம் அளக்க முடியாதது, உலகத்தில் அம்மாவுக்கு நிகர் யாருமில்லை, கண்ணில் தெரியும் கடவுள் அம்மா என்ற கருத்துகளை உணர்த்தும் படைப்பாக இருக்கிறது அம்மாவின் கைபேசி.
இருப்பினும் தங்கர்பச்சன் சாருக்கு ரசிகர்களின் வேண்டுகோள், அழகி மாதிரியான அழியாத ஒரு படைப்பை மீண்டும் எடுக்க முடிந்தால் எடுங்க, இல்லைன்னா ஆளவிடுங்க என்பதே ஆகும்.
கதாநாயகன்: சாந்தனு பாக்யராஜ்
கதாநாயகி இனியா
இசை ரோகித் குல்கர்னி
இயக்கம்: தங்கர் பச்சான்