தமிழ்நாட்டில் மதுரை மேலவெளி வீதியில் உள்ள திரையரங்கில் விஸ்வரூபம் படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து, ஒரு தரப்பினர் கோஷமிட்டனர்.
அப்போது அங்கு நடந்த கல் வீச்சு சம்பவத்தில் தெப்பக்குளம் போக்குவரத்து எஸ்.ஐ., பூமிநாதன், ஆயுதப்படை பொலிஸ்காரர் ஜேம்ஸ் காயமடைந்தனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்ட தலைவர் சாகுல், செயலாளர் முகமது அலி உட்பட 135 பேர் மீது திலகர்திடல் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதேபோல், அந்த திரையரங்குக்கு முன் கோஷமிட்டவர்கள் மீது கல் வீசியதாக மதுரை மாவட்ட கமல்ஹாசன் ரசிகர் மன்ற தலைவர் அழகர், செயலாளர் வெள்ளைதுரை உட்பட 122 பேர் மீதும் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக