செவ்வாய், 8 ஜனவரி, 2013

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் வெளியீடு

பில்லா' படத்திற்கு பிறகு அஜீத் - நயன்தாரா - விஷ்ணுவர்த்தன் - யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்திற்கு தலைப்பு வைக்க இயக்குனரும், அஜீத்தும் படாதபாடு பட்டுவிட்டனர். படம் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில், தற்போது இந்தப் படத்திற்கு பொருத்தமான ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து விட்டனராம். தலைப்பின் பெயர் வெற்றி கொண்டான். விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிட இருக்கிறார்கள். இதுகுறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறும்போது, இந்த படத்திற்கு தலைப்பு வைப்பதற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டுவிட்டோம். தற்போது இப்படத்திற்கு பொருத்தமான தலைப்பு வைத்துள்ளோம். விரைவில் அதுபற்றிய முறையான அறிவிப்பை தெரிவிப்போம் என்று கூறியுள்ளார். அநேகமாக இதற்காக ஒரு விழா எடுத்தாலும் எடுக்கக்கூடும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி விழா ஒன்று வைத்தால், தலைப்புக்காக விழா நடத்திய முதல் திரைப்படம் என்ற பெருமை இந்த படத்திற்கு கிடைக்கும். இந்த படத்தில் ஆர்யா, டாப்ஸி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல வெற்றிப்படங்களை தயாரித்த ஸ்ரீசூர்யா மூவீஸ் சார்பாக ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக