கன்னடத்தில் ரீமேக் ஆகும் தமிழ் படத்தில் நடிக்கிறார் மேக்னா ராஜ். தமிழில் சசிகுமார், லட்சுமி மேனன் நடித்த படம் ‘சுந்தரபாண்டியன்’. இப்படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. லட்சுமி மேனன் ஏற்ற வேடத்தை மேக்னா ராஜ் ஏற்று நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‘சுந்தரபாண்டியன்’ படத்தை தமிழில் பார்த்தேன். அதில் பவர்புல் கதாபாத்திரங்கள் இருப்பதை உணர்ந்தேன். கன்னடத்தில் இப்படம் ரீமேக் ஆகிறது. இதில் ஹீரோயினாக நடிக்க எனக்கு அழைப்பு வந்தது.
உடனடியாக ஒப்புக்கொண்டேன். யாஷ் ஹீரோ. தமிழில் நல்ல கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பதுபோல் கன்னடத்தில் எனது முதல் படம் ‘பண்டா’வுக்கு பிறகும் நல்ல கதைக்காக காத்திருந்தேன். மேலும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதன் காரணமாக வேறு மொழியில் நடிக்க முடியவில்லை. ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அது எனக்கு திருப்தியாக இல்லை. அந்த நிலை இப்போது மாறி இருக்கிறது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக