விஸ்வரூபம் திரைப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் தமிழகம் முழுவதும் வெளியாகும் என்று நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். சென்னையில் 11.01.2013 வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் கட்டுப்பட்டே விஸ்வரூபம் படத்தை முதலில் திரையரங்கில் வெளியிட இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திரையரங்குகளில் வெளியிடும் அதே வேளையில் டிடிஎச்சில் பாட்னர்களையும் தான் ஏமாற்றப்போவதில்லை என்று கமலஹாசன் தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட் டிடிஎச் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ள கமலஹாசன், அவர்களுடன் பேசி முடிவு எடுத்தபின் விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
விஸ்வரூபம் திரைப்படம் 10ஆம் தேதி அன்று டிடிஎச்சிலும், 11ஆம் தேதி திரையரங்கிலும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடும் தேதியை 25ஆம் தேதிக்கு மாற்றியுள்ள கமலஹாசன், இனி டிடிஎச்சில் வெளியிடும் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக