வெள்ளி, 18 ஜனவரி, 2013

த்ரில் படத்தில் காமெடி. விஜய்சேதுபதி நடிக்கும் சூது கவ்வும்

பிட்சா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட ஹீரோ விஜய் சேதுபதி அடுத்து ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கிறார். நலன் குமாரசாமி இயக்குகிறார். இப்படம்பற்றி இயக்குனர் கூறும்போது, ‘பிட்சா, அட்டகத்தி போன்ற படங்களை தயாரித்த நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மாறுபட்ட திரைக்கதை. பிளாஷ்பேக்கில் கதை சொல்வது நீண்ட காலமாக இருந்து வரும் பாணி. அந்தபாணியை மாற்றி இன்டர் கட் ஷாட் முறையில் கதை சொல்லப்படுகிறது. அதாவது ஒரு சம்பவம் நடந்தால் அது எப்படி நடந்தது என்பது உடனுக்குடன் விளக்கப்பட்டுவிடும். ‘பிட்சா’விஜய் சேதுபதி ஹீரோ. சஞ்சிதா ஷெட்டி ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசை. தினேஷ் ஒளிப்பதிவு. தயாரிப்பு சி.வி.குமார் இதுபற்றி விஜய சேதுபதி கூறும்போது,‘எனக்கு மாறுபட்ட கதைக்களத்துடன் படங்கள் அமைந்தது. இதை நானாக தேடிச் செல்லவில்லை, என்னை தேடி வந்தவை. அப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. ‘சூது கவ்வும்’ படமும் வித்தியாசமான கதை. அதாவது கிரைம் கதையில் காமெடி கலக்கப்பட்டிருக்கிறது. இது புதுஅனுபவமாக இருக்கும். இதை பிளாக் காமெடி என்பார்கள். இதன் கதாபாத்திரம் பற்றி இப்போது சொன்னால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். சென்னையில் இதன் ஷூட்டிங் நடக்கிறது’ என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக