சனி, 12 ஜனவரி, 2013

விவரம் தெரியாமல் சிக்கிய ஸ்வேதாபாசுவுக்கு

ஆறுதல் கூறிய சந்தமாமா யூனிட் நபர்கள்.கோலிவுட்டைப்பொறுத்தவரை காமெடியன்களுடன் ஜோடி சேர்ந்த நடிகைகளுடன் தாங்கள் எக்காரணம் கொண்டும் டூயட் பாடுவதில்லை என்கிற ஒரு உயரியை கொள்கையை முன்வரிசை ஹீரோக்கள் நீண்டகாலமாக சீரியசாக கடைபிடித்து வருகின்றனர். அதில் கருணாசும் தப்பவில்லை. அவருடன் ஜோடி சேரும் நடிகைகளெல்லாம் அதன்பிறகு படமே கிடைக்காமல் சொந்த ஊருக்கு பெட்டி படுக்கையுடன் திரும்பிக்கொண்டிருக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் இந்த விவகாரம் தெரியாமல் அவர் நடித்துள்ள சந்தமாமா படத்தில் சிக்கியிருப்பவர் ஸ்வேதாபாசு. கருணாஸ் நடித்த சில படங்கள் வெற்றி பெற்றதை கருத்தில் கொண்டு அப்படத்தில் கமிட்டாகியிருக்கிறார். ஆனால் படம் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த கோடம்பாக்கத்தில் நிலவி வரும் இந்த செண்டிமென்ட் விவகாரத்தைப்பற்றி சிலர் சொல்ல அதிர்ச்சியடைந்து விட்டாராம் ஸ்வேதாபாசு. கண்களை மறைத்து லகானில் குதிரையைக்கட்டுவது போல் என்னை அக்கம் பக்கம் விசாரிக்க விடாமலேயே அந்த படத்தில் சிக்க வைத்து விட்டார்கள் என்று இப்போது புலம்பித்தள்ளி வருகிறார் நடிகை. ஆனால் மேற்படி யூனிட்டோ, அவருடன் நடித்த மற்ற நடிகைகளெல்லாம் சொதப்பல் பார்ட்டிகள். ஆனால் நீ பேரழகி அதனால் உன்னை கோலிவுட் ஹீரோக்கள் மிஸ் பண்ண மாட்டார்கள். கட்டாயம் அரவணைத்துக்கொள்வார்கள் என்று ஆறுதல சொல்லி வருகிறார்களாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக