வியாழன், 3 ஜனவரி, 2013

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் பவர்ஸ்டார் தான் ரோபோவாம்!

       
டப்பதெல்லாம் கனவா அல்லது நிஜமா? என்று புலம்பும் அளவுக்கு பவர்ஸ்டாரின் பாப்புலாரிட்டி இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே பற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது.
போகின்ற இடமெல்லால் “நான் என் ஆசைத்தம்பி டைரக்டர் ஷங்கரிடம் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன், ஆனால் அவர் அண்ணே... நான் உங்களோட தீவிரமான ரசிகன் என்று என்னுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார்” என போகிற போக்கில் அதிர்ச்சி குண்டுகளை தூக்கி போட்டு விட்டுப்போகும் பவர்ஸ்டார் புத்தாண்டிலும் ஒரு அதிர்ச்சி குண்டைத்தான் தூக்கிப் போட்டிருக்கிறார்.
ஆமாம், ‘நண்பன்’ படத்திற்கு பிறகு டைரக்டர் ஷங்கர் டைரக்ட் செய்து வரும் ‘ஐ’. படத்தில் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் ஒரு ரோபோ கெட்டப்பில் வருகிறார் என்பது தான் அந்த வெடிகுண்டு.
ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாதியில் ஒல்லியான கெட்டப்பிலும், இரண்டாம் பாதியில் பயில்வான் போன்ற மெகா சைஸ் கெட்டப்பிலும் மாறி மாறி நடித்து வருகிறார் ‘சீயான்’ விக்ரம்.
போதாக்குறைக்கு இப்போது கூடுதலாக ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் ஒரு ரோபோ கெட்டப்பில் வருகிறாராம். மேலும் இந்தப்படத்தில் காமெடிக்கும் அதிக சீன்களை ஒதுக்கியுள்ள டைரக்டர் ஷங்கர் அந்த சீன்களில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் இருவரையும் நடிக்க வைத்திருக்கிறார்.
எந்த மேக்கப்பும் போடாமலேயே டெரர்ராக இருக்கும் பவர்ஸ்டார் ரோபோ கெட்டப்பில் வந்தால்..? எப்படி இருக்கும்? அதுதான் இந்தப்படத்தின் ஹை-லைட் விஷயமாக இருக்கப்போகிறதாம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக