தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார் இயக்குனர் பிரபு சாலமன். மைனா படத்தில் நடித்த தம்பி ராமையாவிற்கு தேசிய விருதும் கிடைத்ததால், பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் கும்கி படத்தில் ஹீரோவாக நடிப்பது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் விக்ரம் பிரபு எனத் தெரிந்ததும் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் கும்கி பக்கம் திரும்பியது. எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு திரையில் இறங்கிய கும்கி வசூலை அள்ளியது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா, கும்கி யானை மாணிக்கம் என அனைத்து நடிகர்களும் கதாபாத்திரத்துடன் பொருந்தி இருந்தது கும்கியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக