வெள்ளி, 11 ஜனவரி, 2013

ஹீரோக்கள் இருக்கின்றனர். இயக்குனர்

ஹீரோக்கள் கையில் சினிமா இல்லை என்றார் இயக்குனர் வெங்கடேஷ். பரத், நிலா நடிக்கும் படம் ‘கில்லாடிÕ படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். இது பற்றி அவர் கூறியதாவது: எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் கில்லாடித்தனமாக செய்து முடிக்கும் இளைஞன் பற்றிய கதை. பரத் ஹீரோ. நிலா ஹீரோயின். இப்படத்தை பொறுத்தவரை ஆக்ஷன் நிறைந்த கதையாக அமைத்திருக்கிறேன். அதே சமயம் பரத் கதாபாத்திரத்தை யதார்த்தமாக உருவாக்கி இருக்கிறேன். பறந்து பறந்து அடிப்பது, சுழன்றடித்து எதிரிகளை வீழ்த்துவது போன்ற யதார்த்தத்துக்கு மீறிய காட்சிகள் இருக்காது. பரத்தும் இதை உணர்ந்துகொண்டு நடித்திருக்கிறார். யதார்த் தத்துக்கு மீறிய காட்சிகள் வேண்டாம் என்று அவரும் கேட்டுக்கொண்டார். சினிமா இன்றைக்கு மாறிவிட்டது. ஹீரோக்கள் கையில் இப்போது சினிமா இல்லை. கதையின் கையில்தான் ஹீரோக்கள் இருக்கின்றனர். யார் என்றே தெரியாமல் நடிக்கும் ஒருவரின் படம் ஹிட்டாகி விடுகிறது. அதன் மூலம் அந்த நடிகர் ஹீரோவாகி விடுகிறார். கதைக்குள்ள முக்கியத்துவத்தை எல்லா ஹீரோக்களும் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒன்றுக்கு பத்து கதை கேட்டு தேர்வு செய்கிறார்கள். காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்துக்கு காமெடியை எப்படி அமைக்க வேண்டும் என்பது பற்றி மட்டும் விவேக்குடன் 3 நாட்கள் ஆலோசனை நடத்தினேன். வில்லித்தனமான கேரக்டரில் ரோஜா நடிக்கிறார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை. இதன் ஷூட்டிங் முடிந்தது. தயாரிப்பு சந்திரசேகர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக