அனுஷ்கா,ஸ்ரேயா,த்ரிஷா,கமர்ஷியல் படங்களை குறைத்துக்கொண்டு ஹீரோயின் முக்கியத்துவ கதைகளை தேர்வு செய்கின்றனர் ஸ்ரேயா, அனுஷ்கா, த்ரிஷா.
தென்னிந்திய நடிகைகள் கமர்ஷியல் படங்களையே தேர்வு செய்து நடிப்பது வழக்கம். அந்த டிரெண்ட் இப்போது மாறி வருகிறது. அனுஷ்கா, த்ரிஷா, ஸ்ரேயா போன்றவர்கள் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்யத் தொடங்கி உள்ளனர். ‘அருந்ததி‘ படத்தில் நடித்த அனுஷ்கா அதைத் தொடர்ந்து கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து வந்தார். அப்படங்கள் முடிந்ததையடுத்து ஹீரோயின் மைய கதையான ‘ராணி ருத்ரம்மா தேவிÕயில் நடிக்கிறார். இதற்காக இந்த ஆண்டு 150 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு இருமொழியில் உருவாகும் இப்படத்தை குணசேகர் இயக்குகிறார்.
‘பயர்‘, ‘வாட்டர்‘ படங்களை இயக்கிய தீபா மேத்தா ‘மிட்நைட் சில்ரன்‘ என்ற படத்தை இயக்கினார். ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள இப்படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா. இதுதவிர கன்னடம், தமிழில் உருவாகும் ‘சந்திரா‘ மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘பவித்ரா‘ படங்களில் நடிக்கிறார். ஹீரோயினை மையமாக வைத்து எம்.எஸ்.ராஜு தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் த்ரிஷா நடிக்கிறார்.
அடுத்து திவ்யாவும் கன்னடத்தில் ஹீரோயினை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார்.இதுகுறித்து ஸ்ரேயா கூறும்போது, ‘சினிமா தயாரிப்பு இதுவரை தப்பிக்கும் கதை அம்சமுள்ள களங்களில் உருவாக்கப்பட்டு வந்தது. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட சிறுபட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றதைதொடர்ந்து அதுபோன்ற படங்களில் கவனம் திரும்பி இருக்கிறது. இதன் வெற்றியால் இதுபோன்ற படங்களை வரவேற்கும் டிரெண்டுட் உருவாகி இருக்கிறதுÕ என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக