புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் ரஜினி, கமல், அமிதாப் போன்றவர்களை இயக்கியவருமான எஸ்.ராமநாதன்(வயது 83) நேற்று மாரடைப்பால் காலமானார். |
அவருடைய இறுதிச் சடங்குகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள மயானத்தில்
இன்று(வியாழக்கிழமை) நடைபெறவுள்ளன. சென்னை தியாகராயநகர் கிரி சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு திரையுலகைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெங்களூரைச் சேர்ந்த ராமநாதன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் படங்களைத் தயாரித்தவர். சுமார் 35-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தும், இயக்கியும் உள்ளார். அதில், பட்டத்துராணி, பொண்ணு மாப்பிள்ளை ஆகிய தமிழ் படங்களை இயக்கினார். ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, ரஜினி நடித்த தர்மதுரை ஆகிய படங்களைத் தயாரித்தார். ஹிந்தி திரையுலகில் சிறு வேடங்களில் நடித்து வந்த அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்த பாம்பே டூ கோவா படத்தைத் தயாரித்தவர் ராமநாதன். மேலும், ரஜினி, கமல் மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் இணைந்து நடித்த கிராப்தார் என்ற படத்தை இயக்கியவரும் இவரே. ராமநாதனுக்கு கலாவதி என்ற மனைவியும், சைரா, உமா என்ற மகள்களும், சுபீஷ் என்ற மகனும் உள்ளனர். |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக