தனுஷ், சிம்பு இருவரும் மாறி மாறி ஆல்பம் வெளியிட்டும், பாடல்கள் பாடிக்கொண்டும் தங்களது போட்டியை வெளிப்படுத்தி கொண்டிருப்பதை இன்னும் விடவில்லை போலும். சமீபத்தில் தன் நண்பரின் தயாரிக்கும் படம் ஒன்றிற்காக பாடல் ஒன்றை பாடினார் சிம்பு. உடனே தனுஷுக்கு ஏதாவது ஒரு படத்தில் தானும் ஒரு பாடல் பாட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. இந்த நேரத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தன்னுடைய அண்ணனுடை இரண்டால் உலகம் படத்தில் ஒரு வாய்ப்பு வந்ததும் கெட்டியாக பிடித்துக் கொண்டார் தனுஷ்.
குறிப்பிட்ட அந்த பாடலுக்கு தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய இசையமைப்பாளர் தனுஷுக்கு அழைப்பு விடுக்க, பிசியான வேலைகளுக்கு மத்தியில் அந்த பாடலை பாடிக் கொடுத்துள்ளார் தனுஷ். ஏற்கெனவே தனது அண்ணன் படங்களான ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களிலும் பாடியுள்ளார் தனுஷ்.
இந்த பாடல் படமாக்கப்பட்டதும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. அதன்பின் இறுதிப் பணிகளை விரைந்து முடித்து வெகுசீக்கிரமாகவே வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த படத்தில் ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக