5 வருடமாக பைனான்ஸ் பிரச்னையில் இருந்ததால் சொந்த படத்தை முடிக்க முடியாமல் தவித்தேன் என்றார் தேவயானி. ராஜகுமாரன் இயக்கி ஹீரோவாக நடிக்கும் படம் ‘திருமதி தமிழ். ஹீரோயினாக தேவயானி ரீஎன்ட்ரி ஆவதுடன் படத்தை தயாரிக்கிறார். அவர் கூறியதாவது: மீண்டும் ஹீரோயினாக ரீ என்ட்ரி ஆவதில் நம்பிக்கையோடு இருக்கிறேன். 60க்கும் அதிகமான படங்களில் ஹீரோயினாகத்தான் நடித்திருக்கிறேன். இது எனது 75வது படம். திருமதி தமிழ் படத்தை 5 வருடத்துக்கு முன்பு தொடங்கினோம். ஆனால் பைனான்ஸ் பிரச்னைகளால் படத்தை முடிப்பதில் சிக்கல் இருந்தது.
அதெல்லாம் இப்போது தீர்ந்துவிட்டது. படம் முடிந்திருக்கிறது. என் கணவர் ராஜகுமாரன் இதற்கு முன் இயக்கிய எல்லா படங்களிலும் நான் தான் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். இதில் இன்னொரு நாயகியாக கீர்த்தி சாவ்லா நடிக்கிறார். ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், ராதாரவி, சிங்கமுத்து பாண்டு, ரோகிணி, சத்யபிரியா, பாத்திமாபாபு உள்பட 25க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருக்கிறார். மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறுகிறது. தமிழை பற்றி பெருமைப்படுத்திய பாடல்களை கேட்டு பலரும் பாராட்டினார்கள். இவ்வாறு தேவயானி கூறினார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக