ஐஜி அதிரடி முடிவு.திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளைக் கொண்டு விரைவில் ஒரு மலையாளப் படம் தயாரிக்கப்படலாம் என்று மாநில சிறைத்துறை ஐஜி அலெக்சாண்டர் ஜேக்கப் கூறியுள்ளார். இதில் சிறைக் கைதிகளே நடிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள புஜாபுராவில் மத்திய சிறை உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தியின் விற்பனை கடந்தாணடு தொடங்கியது. இதை தொடர்ந்து சிக்கன் குழம்பு, சில்லி சிக்கன் விற்பனையும் சமீபத்தில் தொடங்கப்பட்டது. ஒரு சப்பாத்தி ரூ.2க்கும், சிக்கன் குழம்பு ரூ.25க்கும், சில்லி சிக்கன் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்த விலைக்கு தரமான உணவு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் சமையலுக்கு அடுத்தபடியாக இங்குள்ள கைதிகள் சினிமாவிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
இதுகுறித்து கேரள சிறைத்துறை இயக்குனர் அலெக்சாண்டர் ஜேக்கப் கூறுகையில், திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் ஏராளமான திறமைகள் மறைந்து கிடக்கின்றன. இங்குள்ள கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி, சிக்கனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கில் சப்பாத்தி, சிக்கன் விற்பனையாகி வருகிறது.
இது தவிர பல கைதிகளுக்கு இலக்கிய ஆர்வமும் அதிகமாக உள்ளது. இதை ஊக்குவிக்க சிறை துறை தீர்மானித்துள்ளது. சில கைதிகள் சினிமாவுக்கு கதை எழுதி வருகின்றனர். இந்த கதையில் அவர்களே நடிக்கவும் தீர்மானித்துள்ளனர். நல்ல ஒரு தயாரிப்பாளர் கிடைத்தால் கைதிகளின் நடிப்பில் விரைவில் ஒரு மலையாள சினிமா தயாராகும் என்றார் அவர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக