ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை 2012 ஆம் ஆண்டு நல்ல வரவேற்பைப் பெற்ற ஆண்டாகும். |
சோனி பிக்சர்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் 2012ஆம் ஆண்டில் மட்டும் 217
கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு 12 தலைப்புகளில் வெளியிடப்பட்ட படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலாகும். முன்பு எப்போதும் தொட்டுப் பார்த்திராத சாதனையாக இது அமைந்துள்ளது. கடந்த ஆண்டைப் பொறுத்தவரை 2 படங்கள் மாபெரும் வார இறுதி வசூலை அள்ளியிருக்கின்றன. “தி அமேசிங் ஸ்பைடர் மேன் 3டி'” மட்டும் வெளியான வார இறுதியிலேயே 34 கோடியை அள்ளியது. அடுத்தபடி அதிக வசூல் செய்த படம் “ஸ்கைஃபால்'” இப்படம் முதல் வார இறுதியிலேயே 27.4 கோடி குவித்தது. மேலும் “தி அமேசிங் ஸ்பைடர் மேன்” தேசமெங்கும் 650 நகரங்களில் வெளியிடப்பட்டது புது வரலாறு. இதுகுறித்து சோனி பிக்சர்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெர்சி தருவாலா கூறுகையில், இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. அதன் வியாபார எல்லை படிப்படியாக சீராக அதிகரித்து வருகிறது. இந்திய மொழிகளிலும் இதன் தொடர்ச்சியான வளர்ச்சி நிகழ்ந்து வருகிறது. ஹாலிவுட் படங்களை வெளியிடுவதில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். குறிப்பிடத்தக்க இடத்திலும் நாங்கள் இருக்கிறோம். எங்கள் பங்களிப்பு உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்றார். பொழுது போக்கு உலகத்தின் முடிசூடா மன்னனாகத் திகழும் சோனி பிக்சர்ஸ் 2013லும் தன் அழுத்தமான தடத்தைப் பதிக்க திட்டமிட்டு வருகிறது |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக