திங்கள், 14 ஜனவரி, 2013

நீண்ட இடைவெளிக்கு காரணம் என்ன?

கொலிவுட்டில் ‘காதலில் விழுந்தேன்’, ‘மாசிலாமணி’, ‘கந்தகோட்டை’ படங்களில் நடித்தவர் நகுல். அதன் பின்பு படங்கள் இல்லாமல் இருந்த இவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘மாசிலாமணி’க்கு பின்பு ‘நான் ராஜாவாக போகிறேன்’, ‘வல்லினம்’ படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டேன். இரண்டுமே முக்கியமான படங்கள். ‘வல்லினம்’ படத்தில் கூடைப்பந்து விளையாட்டு வீரனாக நடிக்கிறேன். ‘நான் ராஜாவாக போகிறேன்’ படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறேன். ஒன்று கிக் பாக்சர். இரண்டு படத்துக்குமே என்னை தயார் படுத்த வேண்டியது இருந்தது. இரண்டு விளையாட்டையும் முறைப்படி கற்றுக் கொள்ள அவகாசம் எடுத்துக் கொண்டேன். இந்த இடைவெளியை பெரிதாக எடுத்துக் கொண்டார்கள். தற்போது இரண்டு படங்களுமே வெளிவரும் நிலையில் இருக்கிறது. அடுத்ததாக நான் நடிக்கும் அமளி துமளி ரொமான்டிக் கொமெடிப் படம் என்றும் ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக