சனி, 12 ஜனவரி, 2013

நடன இயக்குனரை நோகடித்த சிவா

நடன இயக்குனர் சொல்லிக்கொடுத்தபடி நடனம் ஆடாமல் தன் இஷ்டத்துக்கு நடனம் ஆடி அவரை நோகடித்தார் சிவா. ‘தமிழ்படம் இயக்கிய அமுதனிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர் கிருஷ்ணன் ஜெயராஜ். இவர் இயக்கும் படம் ‘சொன்னா புரியாது‘. சிவா ஹீரோ. வசுந்தரா ஹீரோயின். இதுபற்றி சிவா கூறியதாவது: கல்யாணத்துக்கு பிறகு ஒரு ஆணின் வாழ்க்கை எப்படி மாறிவிடுகிறது என்பதை மையமாக வைத்து இப்படத்தில் ஒரு பாடல் வருகிறது. இந்த பாடல் ஷூட்டிங்கின்போது தான் எனது திருமணம் நடந்தது. இதில் என்னை எப்படியாவது நடனம் ஆட வைத்துவிட வேண்டும் என்று நடன இயக்குனர் முடிவு செய்தார். ஒவ்வொரு பாடலின் போதும் அவர் ஒன்றுக்கு பல முறை எனக்கு கடுமையாக பயிற்சி அளிப்பார். ஆனால் காட்சியின்போது என் இஷ்டத்துக்குத்தான் ஆடினேன். இதற்குமேல் என்னை ஆட வைக்க முடியாது என்று நொந்துபோனவர், ‘அவர் ஆடுவதே சரியாகத்தான் இருக்கிறது. அந்த மூவ்மென்ட்ஸே ஓகே என்று கூறிவிடுவார். ஹீரோயின் வசுந்தரா பாங்கான நடிப்பை வெளியிட்டிருக்கிறார். இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் ‘தமிழ் படம் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். எனக்கு என்ன கதை பொருந்தும் என்பது அவருக்கு தெரியும். அவர் எப்படி இயக்குவார் என்பதும் எனக்கு தெரியும். அந்த கருத்தொற்றுமையால் இந்த படம் நன்றாக வந்திருக்கிறது. யதிஷ் மகாதேவ் இசை. ஆர்.சரவணன் ஒளிப்பதிவு. ஹபீப், சேண்டிகா அமர்நாத் தயாரிப்பு. இவ்வாறு சிவா கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக