திங்கள், 7 ஜனவரி, 2013

உயிர் நண்பன் கமலுக்காக குரல் கொடுப்பாரா ரஜினி?



ஸ்ருதிஹாசனுக்கு தடையா?
கமல்ஹாசன் தன் விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்வதற்கு பெரும் முயற்சியில் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தன் உயிர் நண்பன் ரஜினிகாந்த் தனக்காக குரல் கொடுப்பாரா என ஏங்கிக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ரஜினி சொன்னால், எந்த தியேட்டர் முதலாளியும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்ற காரணத்தால், தானாகவே முன் வந்து ரஜினி தனக்கு உதவுவார் என கமல் தரப்பு எதிர்பார்க்கிறது.

ஆனால் ரஜினி இவ்விஷயத்தில் பொறுமை காத்து வருகிறார். இந்த விவகாரத்தில் தலையிட்டு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுவிட்டால், அடுத்து வரும் கோச்சடையானுக்கு தியேட்டர் முதலாளிகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் என்ற அச்சம் காரணமாகவும் இருக்கலாம் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
இந்த நேரத்தில் கமல்ஹாசனோடு சேர்த்து ஸ்ருதிஹாசனுக்கு தடைபோட வேண்டும் என தியேட்டர் அதிபர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றார்கள். ஆனால் பொறுப்புள்ள பதவியில் உள்ள சிலர், அதெல்லாம் தவறு, நமக்கு டார்கெட் கமல் மட்டுமே என அமைதிபடுத்தி வருகின்றார்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக