படத்திற்கு தமிழக அரசின் தடை குறித்து மாநில முதல்வர் ஜெயலலிதா இன்று விளக்கமளித்து பேசினார்.
அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
எதையும் முறையாக அறிந்து கொள்ளாமல் இது போன்ற செய்திகள் பரப்பப்படுவதையடுத்து இதற்கு விளக்கமளிப்பது எனது கடமை.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே எனது முதல் கடமை.
இதை சிலர் புரிந்து கொள்ளவில்லை, மக்கள் எவ்வித பிரச்னையும் இல்லாமல் தங்களது வேலைகளை செய்ய வேண்டும்.
விஸ்வரூபத்திற்கு அனுமதி அளித்திருந்தால் வன்முறைகள் ஏற்படும் என உளவுத்துறை அளித்த அறிக்கையின் காரணமாகவே அப்படம் தடை செய்யப்பட்டது.
அதை மீறி படம் திரையிடப்பட்டிருந்தால் வன்முறை வெடித்திருக்கும்.
கருணாநிதிக்கு பதிலடி
ஜெயா டி.வி, அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது. அந்த டி.வி.,யில் எனக்கோ, அ.தி.மு.க.,வுக்கோ எந்த தொடர்பும் இல்லை.
மேலும், கமல் மீது எனக்கு எவ்வித தனிப்பட்ட வெறுப்பும் இல்லை.
கடந்த 1980ம் ஆண்டுகளில் நடந்ததாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறும் விடயங்கள் மிகவும் கேலியானது.
அப்படி ஒரு கடிதத்தையே நான் எழுதவில்லை. என்னைப் பற்றி தவறான செய்தியை தெரிவித்த கருணாநிதி மீது நடவடிக்கை எடுப்பேன்.
சினிமா ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் ஒரு படத்திற்கு மாநில அரசு நேரிடையாக தடை விதிக்க முடியும். இதன் அடிப்படையிலேயே டேம் 999 படத்திற்கு தடை விதிக்கப்பட்டது என ஜெயலலிதா குறிப்பிட்டார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக